அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுவதை ஒருபோதும் தானும், தனது கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை என NRC விவகாரத்தில் மோடி பேச்சு!
சமீபத்தில், அசாம் மாநிலம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியளை வெளியிட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது.
அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் விமர்சித்து வந்தனர்.
இதனை மம்தா பானர்ஜி , என்.ஆர்.சி.யால் உள்நாட்டு போர் வெடிக்கும் என விமர்சித்தார். இந்த விவகாரம் குறித்து சித்தி நிறுவனம் ANI-க்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்...!
இந்தியர்கள் யாரும் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்பதே என்.ஆர்.சி-யின் நோக்கம். இதனை உள்நாட்டு போர் வெடிக்கும் என கூறுபவர்கள், தங்கள் மீது நம்பிக்கை இழந்தவர்கள், மக்களின் ஆதரவை இழந்தவர்கள் கூறும் வார்த்தை தான்.
இதன் மூலம் அவர்கள் தேசத்தின் துடிப்புகளிலிருந்து விலகிச் செல்கிறார்கள். அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுவதை ஒருபோதும் தானும், தனது கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை என மோடி தெரிவித்தார். அரசியலைக் கடந்து, அனைவரும் சமுதாய ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும் பாடுபட வேண்டும் என்றார் அவர்.
மேலும் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் குற்றங்களாக கருதப்பட வேண்டும் என தெரிவித்த மோடி, இதை அரசியலாக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது என தெரிவித்த பிரதமர், அரசின் திட்டங்களால் சிறுமிகள், சிறுவர்களின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது என்றார்.
Full transcript of PM Narendra Modi’s interview to ANI #PMtoANI https://t.co/dMcJjYJl7v pic.twitter.com/LkgAOKRgH1
— ANI (@ANI) August 12, 2018
பாரதீய ஜனதா கட்சியை தனியாக எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் மகா கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். சந்தர்ப்பவாத கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி, மன்னர் ஆட்சி முறையை தொடருவதற்காக மட்டுமேயன்றி மக்களின் வளர்ச்சிக்காக அல்ல என்றும் பிரதமர் புகார் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. வரியை கப்பார் சிங் டேக்ஸ் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருவது குறித்து விளக்கம் அளித்த பிரதமர், தங்களை சுற்றி நடைபெறும் கொள்ளையை பார்ப்போர் அது குறித்தே சிந்திப்பர் என்றார். மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததாலே, காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி.யை எதிர்த்ததாகவும், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் "எல்லாம் தெரியும்" மனநிலையே இதற்கு காரணம் எனவும் மோடி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில், தன்னை கட்டிப்பிடித்தது நடிப்பு என்றும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் மோடி தெரிவித்தார். வேலைவாய்ப்புகள் இல்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து விளக்கம் அளித்த அவர், பதிவேட்டில் இடம் பெறாதவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கவிருக்கும் நிலையில், அங்கு வன்முறை மற்றும் பயங்கரவாதம் இல்லாத நிலை ஏற்படும் என நம்புவதாகவும் மோடி தெரிவித்தார்.