மத்திய அரசின் மேக் இன் இந்தியா (Make in India) திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கிலான தற்சார்பு இந்தியா திட்டத்தின் பலனாக, பிரபல் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் (Samsung) உத்தரபிரதேசத்தில் (உ.பி.) மொபைல்கள் மற்றும் டேப்களுக்கான டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் உற்பத்தி பிரிவை, சீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியா பிரிவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கென் காங் தலைமையிலான நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பேசியது. அதன் பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தொழில் துறையினருக்கான உகந்த சூழல் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் கொள்கைகள் காரணமாக, சீனாவில் (China) அமைந்துள்ள டிஸ்ப்ளே உற்பத்தி பிரிவை உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நிறுவ சாம்சங் முடிவு செய்தததாக கூறப்பட்டுள்ளது.
ALSO READ | விரிவான ஆலோசனைக்கு பின் உருவானது புதிய ஐடி விதிகள்: ஐநாவில் இந்தியா
சாம்சங்கின் (Samsung) டிஸ்ப்ளே பிரிவு கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும் தொடர்ந்து இந்தியாவில் மேலும் தொழில் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும் என்றும் கூறியுள்ள சாம்சங் நிறுவனம், உ.பி.யை உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கிய நடவடிக்கை இது என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், எதிர்காலத்தில் சாம்சங் நிறுவனத்திற்கு, மாநில அரசு தொடர்ந்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உத்திர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிக் குழுவுக்கு உறுதியளித்தார்.
உத்திர பிரதேசத்தின் நாய்டா மற்றும் கிரேட்டர் நாய்டா பகுதிகளை தொழில் மையமாக மாற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திர பிரதேச அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கிரேட்டர் நாய்டாவில், பாலிவுட்டின் மிக பெரிய பிலிம் சிட்டியை உருவாக்கும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | வீடியோ அழைப்பில் விசாரணைக்கு ஆஜராக தயார்: Twitter India தலைவர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR