சசிகலா தமிழக முதல்வராக சுப்ரமணியசாமி ஆதரவு

தமிழக முதல் அமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் மற்றும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

Last Updated : Feb 8, 2017, 11:36 AM IST
சசிகலா தமிழக முதல்வராக சுப்ரமணியசாமி ஆதரவு title=

புதுடெல்லி: தமிழக முதல் அமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் மற்றும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

நேற்று இரவு ஜெ., சமாதிக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் சுமார் 40 நிமிடங்கள் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார். அங்கு ஓ. பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டி தமிழகத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது.

தற்போதைய சூழல் தெளிவாக உள்ளது. தமிழக முதல் அமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும். தாமதமானால் சட்டத்திற்கு புறம்பாகிவிடும். இந்த பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Trending News