மேற்கு வங்க தேர்தல் 2021: இன்று நடைபெறவுள்ள ஆறாவது கட்டத் தேர்தலில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த 10 மில்லியன் வாக்காளர்கள் 43 தொகுதிகளில் (Assembly Seats) போட்டியிடும் 306 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிப்பார்கள். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும்.
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை உத்தர் தினாஜ்பூர், நாடியா, வடக்கு 24 பர்கானாக்கள், மற்றும் கிழக்கு பர்தமான் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 43 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
இன்று வடக்கு 24 பர்கானாவில் 17 தொகுதிகளிலும், நாடியா மற்றும் வடக்கு தினாஜ்பூரில் தலா 9 தொகுதிகளிலும், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.
மேற்கு வங்க தேர்தலில் 6 வது கட்டத்தில் (West Bengal Polls) திருணாமுல் காங்கிரஸ் (All India Trinamool Congress) மற்றும் பாஜக 43 சட்டமன்ற இடங்களிலும் நேரடியாக மோதுகின்றனர்.
ALSO READ | தேர்தல் ஆணையம் தடையை எதிர்த்து தர்ணாவில் அமர்ந்தார் மம்தா பானர்ஜி
சட்டமன்றத் தேர்தலின் ஆறாவது கட்டத்தின் முக்கிய பெயர்களில் பாஜகவின் (BJP's) தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், திருணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஜோதிப்ரியோ மல்லிக் மற்றும் சந்திரிமா பட்டாச்சார்யா, சிபிஐஎம் (CPIM) தலைவர் தன்மய் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்குவர்.
இதுவரை 180 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 114 இடங்களுக்கு ஏப்ரல் 22 முதல் 29 வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
West Bengal: People form queues outside polling station number 205 in Jagatdal constituency.
Voting for the sixth phase of Assembly elections will commence at 7 am today. pic.twitter.com/DsVCeyt7xW
— ANI (@ANI) April 22, 2021
ஏற்கனவே நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல் ஐந்து கட்டங்களுக்கான தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. ஏழாம் மற்றும் எட்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். இன்னும் இரண்டு கட்டங்கள் உள்ளன. இது முடிந்தவுடன் ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2 எண்ணப்படும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ALSO READ | Cooch Behar வன்முறை மற்றும் மரணத்திற்கு மம்தா பானர்ஜி தான் காரணம்- அமித் ஷா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR