ஸ்மார்ட் போன் யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் காலத்தில் புத்தகங்க்ள ஈ-புக் வடிவிற்கு மாற ஆரம்பித்துவிட்டன. இருப்பினும், நம்மில் பலர் சமூக வலைதளம், ஓடிடியில் படம் பார்ப்பது என பயங்கரமாக திசை மாறி சிதறி ஓடிக்கொண்டிருப்பதால் யாருக்கும் படிப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. ஆனாலும், சிலர் இன்னும் புத்தக விரும்பிகளாக இருக்கின்றனர். இன்னும் சிலர் தங்களது எழுத்து மற்றும் பேச்சு திறையமையை வளர்த்துக்கொள்ள புத்தகங்களை படிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அப்படி விரும்பி புத்தகம் படிப்போருக்கான சில புத்தகங்களை இங்கே பார்ப்போம்.
மேலும் படிக்க | எழுத்தாளர் இமையம் 'கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரர்' - எழுத்தாளர் அரவிந்தன்
1984-ஜார்ஜ் வெல்:
ஜார்ஜ் வெல் என்ற எழுத்தாளர் எழுதியை 1984 புத்தகம் பலரின் ஃபேரட்டாக அமைந்துள்ளது. ஒரு மனிதனி்ன் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் அதை அவன் எதிர்காெண்டு போராடி மேன்மைக்கு வருவதையும் அழகாக கூறியுள்ள புத்தகம் இது.
ஹேரி பாட்டர்-ஜே.கே ரௌலிங்:
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் கட்டிப்போட்ட மாயாஜால கதை இது. 90’ஸ்களில் வெளிவந்த புத்தகங்கள் ஹிட் என்றால், அதன் பிறகு வெளிவந்த திரைப்படங்கள் அதை விட பெரிய ஹிட் ஆனது. நீங்கள் இந்த திரைப்படங்களை பார்த்திருந்தாலும் கண்டிப்பாக புத்தகங்களை படிக்கலாம்.
லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்-டோல்கின்:
உலகின் நடுப்பகுதியில் வாழும் மனிதர்கள் குறித்த சுவாரஸ்யமான மாயாஜால கதைதான் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ். ஃப்ராேடோ பேகின்ஸ் என்ற கதாநாயகனை சுற்றி நிகழும் கதைதான் இந்த புத்தகம். இதுவும் படமாக வந்துள்ளது. ஆனாலும், நீங்கள் இந்த புத்தகத்தின் கதையை பார்த்தீர்களென்றால் கண்டிப்பாக பல சர்ப்ரைஸ்களுக்கு உள்ளாவீர்கள்.
தி கிரேட் காட்ஸ்பி-ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டு:
உலகின் மகிழ்ச்சி-துக்கம் என பல எமோஷன்களை கலந்த புத்தகம்தான் தி கிரேட் கேட்ஸ்பி. 1925ல் வெளியான இந்த நாவல் பலருக்கு வாழ்க்கை குறித்தும் காதல் குறித்தும் சிறந்த படிப்பினைகளை கற்றுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
ப்ரைட் அண்ட் ப்ரீஜுடீஸ்-ஜேன் ஆஸ்டின்:
ஹாரி பாட்டரை விட மிகவும் பிரபலமான நாவல்களுள் ஒன்று, ப்ரைட் அண்ட் ப்ரீஜுடீஸ். “மோதலில் இருந்துதான் காதல் ஆரம்பிக்கும்” என்பதை பல காலத்திற்கு முன்னரே கூறிய கதை இது. இந்த புத்தகம், திரைப்பட வடிவிலும் வெளிவந்து ஹிட் ஆனது.
தி டைரி ஆஃப் ய யங்க் கர்ள்-ஆன் பிராங்க்:
ஜெர்மனியில் நடந்த நாஜிக்களின் போரின் போது, 16 வயது நிரம்பிய ஆன் பிராங்க் என்னென்ன எண்ணங்களை கொண்டிருந்தாள் என்ற புத்தகம்தான் இது. ஆன் பிராங்க் உயிரிழப்பிற்கு பிறகு கிடைக்கப்பெற்ற அவரது டைரியை வைத்து எழுதப்பட்ட புத்தகம் இது.
தி புக் தீஃப்-மார்கஸ் சுஸாக்:
1939ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடைப்பெறுவது போன்ற கதையை அடிப்படையாக கொண்டது இந்த புத்தகம். ஜெர்மனி போரில் மாட்டிக்கொண்ட ஜியூ இனத்தை சேர்ந்த மக்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தனர் என்பதையும் இந்த புத்தகம் காண்பித்திருக்கும். இப்புத்தகம் பலருக்கு வாழ்க்கை படிப்பினையை போதித்துள்ளதாக கூறப்படுகிறது.
லிட்டில் வுமன்-லியிசா மே ஆல்காட்:
19 நூற்றாண்டில் நிகழ்வது பாேல இந்த புத்தகத்தின் கதை எழுதப்பட்டிருக்கும். ஒரே வீட்டில் வளரும் நான்கு அக்கா, தங்கைகளையும் அவர்களது வாழ்க்கை போராட்டத்தையும் சுற்றி நிகழும் கதை இது.
கான் வித் தி வின்ட்-மார்கரெட் மிட்செல்
அமெரிக்காவில் நடைப்பெற்ற உள்நாட்டுப்போர் மற்றும் அதனை சுற்றி நிகழ்பவற்றை வைத்து எழுதப்பட்ட புத்தகம், கான் வித் தி வின்ட். இது படமாகவும் உருவாக்கப்பட்டு பெரிய ஹிட் அடித்தது. போரில் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்ணை வைத்து எழுதப்பட்ட கதை இது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ