ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது ஒன் டைம் பாஸ்வேர்டு எனப்படும் ஓடிபி எண்ணை உள்ளிடுவதன் மூலம் அதன் வாடிக்கியாளர்களை ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்றும், ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்களில் நடக்கும் மோசடியிலிருந்து வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய மாற்றத்தை மற்ற வங்கிகளும் கூடிய விரைவில் அதன் ஏடிஎம் மையங்களிலும் செயல்படுத்த போகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கக்கூடிய முறையாக கருதப்படுகிறது, நிச்சயமாக இதன்மூலம் மோசடி கும்பலால் எந்தவித கைவரிசையும் காட்டமுடியாது என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS! வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியது எஸ்பிஐ
எனவே இனிமேல் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ஓடிபி எண்ணை உள்ளிட்டால் தான் அவர்களது கைக்கு பணம் கிடைத்து டிரான்ஸாக்ஷன் முழுமையடையும். அந்த நான்கு இலக்க ஓடிபி எண்ணானது வாடிக்கையாளர்களின் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும், அந்த எண்ணை உள்ளிட்ட வேண்டும், மேலும் இந்த ஓடிபி எண்ணானது ஒரே ஒரு டிரான்ஸாக்ஷனுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த செயல்முறையை எஸ்பிஐ வங்கியானது ஜனவரி 1, 2020 அன்று அறிவித்தது, சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வையும் வங்கி ஏற்படுத்தியது. ரூ.10,000 அல்லது அதற்கு மேல் ஏடிஎம் மையத்தில் எடுக்கும்பொழுது ஓடிபி எண்ணை உள்ளிட்ட வேண்டும். இப்போது ஏடிஎம் மையத்தில் ஓடிபி எண்ணை பயன்படுத்தி பணத்தை எப்படி எடுக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
- ஏடிஎம் மையத்திற்கு நீங்கள் செல்லும்போது டெபிட் கார்டுடன், உங்கள் மொபைலையும் எடுத்து செல்ல வேண்டும்.
- உங்கள் கார்டை நீங்கள் செருகி, ரகசிய இலக்க எண்ணை உள்ளிட்டதும், உங்களிடம் ஓடிபி எண் கேட்கப்படும்.
- இப்போது உங்களது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அந்த ஓடிபி நம்பர் வரும்.
- உங்கள் மொபைலிற்கு வந்த ஓடிபி எண்ணை இப்போது நீங்கள் ஏடிஎம் மிஷினில் உள்ளிட்ட வேண்டும்.
- ஓடிபி எண்ணை உள்ளிட்டதும் உங்களது டிரான்ஸாக்ஷன் முழுமைபெறும்.
மேலும் படிக்க | ITR போர்டலில் பயனர்கள் சந்திக்கும் ‘சிக்கல்கள்’; அரசு கூறுவது என்ன..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ