Vegetable Juices For Weight Loss : உடல் எடையை குறைத்து அழகாக இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் தற்போதைய பிஸியான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் போன்றவற்றால் நமது உடல் எடை தவறான முறையில் அதிகரிக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்க (Weight Loss Tips) நம்மால் சரியான நேரத்தை ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. மறுபக்கம் உணவுக் கட்டுப்பாடு என்பது எளிதான காரியம் அல்ல, அதேபோல் தினம்தோறும் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யும் நமக்கும் நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், சில காய்கறிகளின் ஜூஸூகளை குடிப்பதன் மூலம் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். மேலும் இந்த காய்கறிகளின் ஜூஸ் குடிப்பதன் மூலம் தொப்பை கொழுப்பை எரிக்க உதவும்.
உடல் எடை குறைக்க உதவும் ஜூஸ்கள் | Vegetable Juice For Weight Loss:
பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட் ஜூஸை நாம் அருந்தலாம், அதன் சாற்றை குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். ஏனெனில் இந்த ஜூஸில் நல்ல அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன, அவை உடல் எடையைக் குறைக்க உதவும். அத்துடன் புரதசத்து, நீர்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புசத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளன. எனவே உடற்பயிற்சி செய்பவர்கள் பீட்ரூட் ஜூஸை குடித்து செய்தால் உடலில் ரத்த ஓட்டம் மேலும் அதிகரிக்க உதவுவதோடு, ஸ்டாமினை வலுவாக்க உதவும்.
கீரை ஜூஸ்: பச்சை இலை காய்கறிகளில் கீரை மிகவும் சத்து வாய்ந்த காய்கறியாகும். கீரையில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளதால், இவை தொப்பையை குறைக்க உதவும். இதனால் செரிமானமும் மேம்படும். இந்த ஜூஸில் உள்ள செர்லி மற்றும் பார்ஸ்லி கலவை, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவும்.
கேரட் ஜூஸ்: உடல் எடை குறைக்க கேரட் ஜூஸ் மிகவும் பயன் தரும். நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட காய் இதுவாகும். இது செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவும். கேரட் ஜூஸ் பித்த சுரப்பை அதிகரிக்கும், இது அதிக கலோரிகளை கரைக்கச் செய்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
முட்டைக்கோஸ் ஜூஸ்: முட்டைக்கோஸ் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி ஆகும். இதனை உட்கொள்வதால், வாய்வு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். முட்டைக்கோஸ் சாறு தயாரித்து உட்கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம். இந்த ஜூஸை குடித்த பிறகு, நீண்ட நேரம் வயிறு நிரம்பியவாரே இருக்கும். முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுவதை நாம் தடுக்கலாம் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முடி உதிர்ந்து, வழுக்கைக்கு குட் பை சொல்லுங்க.. உடனே இதை செய்யுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ