“டிக் டிக் டிக்” படத்திற்கு கிடைத்தது யு/ஏ சான்றிதல்!!

"டிக் டிக் டிக்" திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Last Updated : Jan 15, 2018, 06:33 PM IST
“டிக் டிக் டிக்” படத்திற்கு கிடைத்தது யு/ஏ சான்றிதல்!! title=

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "டிக் டிக் டிக்". இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்) முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதை தொடர்ந்து, தற்போது இந்த படத்திற்கு சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து படத்தை வருகிற ஜனவரி 25-ம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே,இப்படத்தின் டீஸர் டிரைலர் மற்றும் பாடல் வரிகள் வெளியாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படம் இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News