முதலை மற்றும் மானின் வைரல் வீடியோ: முதலை ஊர்வன வகுப்பினைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. பொதுவாக ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கின்றது. முதலைக்கு இடங்கர், கடு, கரவு, கோதிகை, சிஞ்சுமாரம், மகரம், முசலி என்ற பல பெயர்கள் வழங்கியுள்ளன.
மறுபுறம் மான் இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்காகும். அறிவியலில் மான் இனத்தை செர்விடே என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்காகும். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்தது. அதேபோல் மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவரிமான் என நிறைய வகைகள் உள்ளன. இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன.
மேலும் படிக்க | சினேகாவுக்கு எக்ஸ்பிரசனில் டஃப் கொடுக்கும் சுட்டிக் குழந்தை - வைரல் வீடியோ
இந்த நிலையில் இன்று நாம் முதலை மற்றும் மான் தொடர்பான வீடியோ ஒன்றை காண உள்ளோம். பொதுவாக தண்ணீர் குடிக்க ஒரு விலங்கு ஆற்றுக்குச் செல்லும் போது, முதலை அதைத் தாக்குவதை நீங்கள் பல வீடியோவில் பார்த்திருப்பீர்கள். சில சமயங்களில் அது வெற்றி பெறுகிறது, ஆனால் சில சமயங்களில் முதலை சுழலில் சிக்கிக் கொள்ளாமல் தப்பி விடுகிறது.
மான் மீது முதலை தாக்குதல்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மான் எப்படி தனது தாகத்தை தீர்த்துக்கொள்ள ஆற்றுக்கு தண்ணீர் குடிக்கச் செல்வதை நாம் வீடியோவில் காணலாம். அப்போதுதான் முதலையின் கண்கள் அந்த மானின் மீது விழுகின்றன. அந்த முதலை ஒளிந்துக்கொண்டு மானைப் பிடிக்க அதை நோக்கி பாய்கிறார். ஆனால் மான் இங்கே தயாராக இருந்ததால், வேகமாக பின்வாங்கியது.
மான் மற்றும் முதலையின் வீடியோவை இங்கே காணுங்கள்:
முதலை மற்றும் மான் தொடர்பான இந்த வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகளும் பலவித கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | Viral Video: இது தான் ஃபுல் டாஸா... காட்டு பன்றியை தூக்கி எறிந்த காண்டாமிருகம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ