மனிதர்களே செய்ய மறக்கும் செயலை யானை ஒன்று செய்திருக்கும் நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விலங்குகள், குறிப்பாக யானைகள், நீண்ட காலமாக அதிக உணர்திறன் மற்றும் புத்திசாலித்தனமான உயிரினமாக கருதப்படுகின்றன. இதனை உறுதி படுத்தும் விதமாக யானை ஒன்று குப்பையை தரையில் இருந்து தூக்கி கழிவுத் தொட்டியில் வைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
@NatureIsLit என்ற ட்விட்டர் கணக்கின் மூலம் முதலில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்ட வீடியோவாக உருவெடுத்துள்ளது.
Elephant caught throwing away litter into a trash can at a safari outpost pic.twitter.com/vOe8FTk65e
— Nature is Lit (@NaturelsLit) July 12, 2019
இந்த வீடியோவில் யானை தரையில் கிடந்த குப்பைகளை எடுத்து குப்பை தொட்டியில் இடுவதை நம்மாள் பார்க்க முடிகிறது. ஆரம்பத்தில் என்ன செய்வது என்று உறுதிபாடு இல்லாமல் இருக்கும் யானை, இறுதியில் அதை அதன் தண்டு மற்றும் காலால் எடுத்துக்கொண்டு குப்பை தொட்டியில் இடுகிறது.
ஒரு யானையால் இது முடியும் என்றால், மனிதர்களால் ஏன் முடியாது?
குப்பை தொட்டி அருகில் இருக்கம் பட்சத்தில் யார் ஒருவரும் அருகில் இருக்கும் குப்பைகளை குப்பை தொட்டியில் இடுவது வழக்கம் தான். ஆனால் பலரும் அவ்வாறு செய்வதில்லையே... இத்தகு சூழலில் இறக்கையில் நன்மையை விரும்பும் யானைகள் மனிதர்களை விடவும் உணர்வுபூர்வமாக நடந்துக்கொள்ளும் இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.