பதபதைக்க வைக்கும் முதலைகளின் சண்டை: கேமராவில் கைதாகி வைரலான வீடியோ

Animals Viral Video: இரு பெரிய முதலைகளுக்கு இடையில் நடக்கும் பதபதைக்க வைக்கும் சண்டையைப் பார்த்து அருகில் உள்ள விலங்குகள் அச்சம் கொண்டு ஓடி விடுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2022, 06:55 PM IST
  • மோதிக்கொண்ட முதலைகள்.
  • சினிமாவை மிஞ்சும் காட்சிகள்.
  • திக் திக் வீடியோ .
பதபதைக்க வைக்கும் முதலைகளின் சண்டை: கேமராவில் கைதாகி வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

ஒரே இனத்தின் பல விலங்குகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இரண்டு முதலைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்ப்பது மிக அரிது. அத்தகைய காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது காணப்படுகிறது.

இந்த வீடியோவில், இரண்டு ராட்சத முதலைகள் தங்களுக்குள் மோசமாக சண்டையிடுகின்றன. இரண்டும் மோதிக்கொள்வதைப் பார்த்து அருகில் உள்ள விலங்குகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுகின்றன. காட்டு விலங்குகள் சண்டையிடுவது தொடர்பான இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மோதிக்கொண்ட முதலைகள் 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆற்றில் இரண்டு முதலைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதை காண முடிகின்றது. இரண்டுக்கும் இடையே நீண்ட நேரம் கடும் சண்டை நடக்கிறது. இரு முதலைகளும் மாறி மாறி தாக்கிக்கொள்கின்றன. 

மேலும் படிக்க | சிக்கிய பாம்பை காப்பாற்றிய பொதுமக்கள்: நெகிழ வைக்கும் வீடியோ 

இரு பெரிய முதலைகளுக்கு இடையில் நடக்கும் பதபதைக்க வைக்கும் சண்டையைப் பார்த்து அருகில் உள்ள விலங்குகள் அச்சம் கொண்டு ஓடி விடுகின்றன. இரு முதலைகளும் ஒன்றைஒன்று பின்னிப்பிணைந்து சுற்றி வளைத்து சண்டையிடுவது பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. 

திகிலூட்டும் அந்த முதலை மோதல் வீடியோவை இங்கே காணலாம்: 

முதலையின் சண்டை வீடியோ வைரலாக பரவியது

இரண்டு பயங்கர முதலைகளின் சண்டை தொடர்பான இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ animals.energy என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வழக்கம் போல் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். இதுவரை, இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | நாயிடம் கண்ணாமூச்சி ஆடிய பூனை! வைரல் வீடியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News