Viral Video: மாப்பிள்ளை ஊர்வலத்தில் பெரும் ‘தீ’; மணமகன் நிலை என்ன ஆனது..!!

இந்திய திருமணங்களில் மாப்பிள்ளை ஊர்வலம் மிகவும் கோலாகலமாக நடைபெறும். வட மாநிலங்களில் இதனை பராத் என அழைப்பார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 15, 2021, 02:32 PM IST
Viral Video: மாப்பிள்ளை ஊர்வலத்தில்  பெரும் ‘தீ’; மணமகன் நிலை என்ன ஆனது..!! title=

இந்திய திருமணங்களில் மாப்பிள்ளை ஊர்வலம் மிகவும் கோலாகலமாக நடைபெறும். வட மாநிலங்களில் இதனை பராத் என அழைப்பார்கள். இதில் மாப்பிள்ளை ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட குதிரை அல்லது குதிரை வண்டியில் வருவார்கள்.  

அந்த வகையில், குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் நடந்த திருமணம் ஒன்றில், திருமண மண்டபத்தை நோக்கி மாப்பிள்ளை ஊர்வலம் சென்ற போது, மாப்பிள்ளை ஊர்வலமாக வந்த குதிரை வண்டி தீ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மணமகன் இருக்கும் போதே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் திருமண அரங்கை நோக்கி பாரத் ஒன்று சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமண ஊர்வலத்தின் போது மக்கள் பட்டாசு வெடித்து நடனமாடினர். தீப்பிடித்த குதிரை வண்டியில் சில பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பட்டாசு வெடிக்கும் போது, வண்டியில் உள்ள பட்டாசுகள் வெடித்து தீ பிடித்துக் கொண்டது.

ALSO READ | Viral Video: மருதாணியை ரவிக்கையாக அணிந்து அசத்திய மணப்பெண்..!!

மணமகன் சிறிது நேரத்தில் தப்பித்து, வண்டி தீப்பிடித்து எரியும் கொண்டிருக்கும் போது அதில் இருந்து குதிப்பதை வீடியோவில் காணலாம். அதிர்ஷ்டவசமாக அவர் பாதுகாப்பாக வண்டியில் இருந்து இறங்கினார், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருமண ஊர்வலத்தில் இருந்தவர்களும்   மற்றவர்களும் தீயை அணைக்க உதவுவதை வீடியோவில் காணலாம். பின்னர் அருகில் உள்ள கடைகளில் இருந்து தீயணைப்பு கருவிகள் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தனர். 

ALSO READ | Viral Video: வரலாற்று சாதனை! பனிபடர்ந்த அண்டார்டிகாவில், தறையிறங்கிய விமானம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News