வேகமாக வந்த பஸ்ஸுக்கடியில் சிக்கிய இளைஞர், பதபதைக்க வைக்கும் Video

ஒரு பேருந்தை முந்திக்கொண்டு செல்ல முயன்ற ஒரு இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த நபர் உயிர் தப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2021, 08:42 PM IST
வேகமாக வந்த பஸ்ஸுக்கடியில் சிக்கிய இளைஞர், பதபதைக்க வைக்கும் Video title=

Viral Video: மனித வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் நம்மால் முற்றிலும் நம்ப முடியாத வகையில் இருப்பதை நாம் பலமுறை கண்டுள்ளோம். அதே போன்ற ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. ஒரு பேருந்தை முந்திக்கொண்டு செல்ல முயன்ற ஒரு இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ தற்போது வைரலாகி (Viral Video) வருகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். ஆனால், அவர் பேருந்தில் மோதி, பைக்கில் இருந்து கீழே விழுந்து டிரைவர் பிரேக் அடிக்கும் முன்பே பேருந்தின் கீழ் சென்றார். அவரது பைக் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது, ​​அவர் அதிசயியத்தக்க வகையில் அதன் அடியில் இருந்து வெளியேறினார். உடனே அவரது பைக்கையும் சரிபார்த்தார்.

இந்த செய்தியை பகிர்ந்த பத்திரிக்கையாளர் கோபி கங்கர், தனது ட்விட்டர் பதிவில், " குஜராத்தின் தாஹோத்தில் ஒரு இளைஞர் பேருந்தின் மீது வேகமாக மோதியும் அதிசயமாக தப்பினார். அவர் பேருந்தின் கீழ் சென்றார். ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் வெளியே வந்ததோடு, தன் பைக் சரியாக இருக்கிறதா என்றும் பார்க்க சென்றார்” என்று எழுதியுள்ளார்.

அந்த அதிசயமான வீடியோவை இங்கே காணலாம்:

ALSO READ: Shocking Video; அண்ணனை மாடியில் இருந்து தூக்கி வீச முயன்ற தம்பிகள்

இந்த வீடியோ (Video) வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த பல நெட்டிசன்கள் அச்சமுற்றனர். இந்த விபத்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறினர்.

பேருந்தை முந்திச் சென்ற அந்த பைக் இளைஞரை பலர் குற்றம் சாட்டினர். அவர் இத்தனை கவனக்குறைவாக இருந்திருக்கக் கூடாது என கமெண்டில் பலர் கூறியுள்ளனர்.

சிலரோ அந்த இளைஞனின் அதிர்ஷ்டத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.

"அவர் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்," என்று ஒரு பயனர் எழுதினார். மற்றொருவர், "இது 100% பைக் ஓட்டியவரின் தவறு. அவர் பேருந்தை முந்திக் கொண்டு சென்றது மிகவும் தவறான விஷயம்” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

உண்மையில் தவறு யாருடைய? நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?

ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News