BRICS U-17 கால்பந்துப் போட்டி, இந்தியா மீண்டும் தோல்வி!

தென்னாப்பிரிக்காவின் ஜொனஸ்பார்க்கில் நடைப்பெற்று வரும் BRICS U-17 கால்பந்து போட்டியில் இந்தியா மகளிர் இரண்டாவது தோல்வியை தழுவியது!

Last Updated : Jul 20, 2018, 04:04 PM IST
BRICS U-17 கால்பந்துப் போட்டி, இந்தியா மீண்டும் தோல்வி! title=

தென்னாப்பிரிக்காவின் ஜொனஸ்பார்க்கில் நடைப்பெற்று வரும் BRICS U-17 கால்பந்து போட்டியில் இந்தியா மகளிர் இரண்டாவது தோல்வியை தழுவியது!

தென்னாப்பிரிக்காவின் ஜொனஸ்பார்க்கில் BRICS U-17 கால்பந்து போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய மகளிர் அணி இரண்டாவது தோல்வியினை தழுவியுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 18-ஆம் நாள் நடைப்பெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 1-5 என்ற கணக்கில் முதல் தோல்வியை தழுவிய இந்தியா., நேற்றைய போட்டியில் ரஷ்யாவினை எதிர்கொண்டது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் இந்தியாவின் சௌமியா அணிக்கான முதல் கோலினை அடிக்க, அடுத்த மூன்றாவது நிமிடத்தில் ரஷ்யா தனது பதில் கோலை அடித்தது. தொடர்ச்சியான வேகத்தை குறைக்காத ரஷ்யா 26-வது நிமிடத்தில் இரண்டாவது கோலினையும் அடித்தது. இதனால் ஆட்டத்தின் முதற்பாதி முடிவில் 1-2 என்று இருந்த புள்ளாகள், மறுபாதியில் ஆட்டத்தின் நிலையினை மாற்றியது.

ரஷ்யாவின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் தத்தளித்து வந்த இந்தியா 1-3 என்ற கணக்கில் போட்டியினை இழந்தது.

Trending News