CSK vs KKR Highlights IPL 2024: சென்னையில் நேற்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்த சென்னை அணி இந்த போட்டியில் கம்பேக் கொடுத்துள்ளது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதிரடியான பேட்டிங் ஆர்டர் கொண்ட கொல்கத்தா அணியை வெறும் 137 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. மேலும் 9 விக்கெட்களையும் கைப்பற்றினர் சென்னை பவுலர்கள். துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி! வின்னிங் ஷாட்டை ருதுராஜை அடிக்கவிட்ட தோனி
ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான கேட்சினால் கேகேஆர் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அங்கு இருந்தே கேகேஆர் பேட்டிங் தடுமாறியது. பின்பு, சுனில் நரேன் மற்றும் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி பவர்பிளே ரன்கள் அடித்தாலும் அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்து ரன்களை கட்டுப்படுத்தியது. எளிமையான இலக்கை எதிர்த்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் கெய்க்வாட் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ரச்சின் அவுட் ஆக, ரஹானேவிற்கு காயம் ஏற்பட்டதால் மிட்செல் நம்பர் 3ல் களமிறங்கினார். மிடில் ஓவர்களில் விக்கெட்களை இழக்காமல் நல்ல பாட்னர்ஷிபை கொண்டு சென்றனர். 2வது விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தது இந்த ஜோடி.
பின்பு களமிறங்கிய சிக்ஸர் துபே 3 சிக்சர்களை விளாசினார். வருண் சக்ரவர்த்தி பந்தில் இரண்டு சிக்சர்களையும், அரோராவின் பந்தில் ஒரு சிக்சர் அடித்து வெற்றியை எளிதாக்கினார். கடைசியில் தோனி களமிறங்குவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்கள் மீதம் இருக்கும் போது களமிறங்கினார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் அடித்து இருந்தார். சிஎஸ்கே 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. இந்த சென்னை அணிக்கு மூன்றாவது வெற்றியாகவும், கொல்கத்தா அணிக்கு இந்த சீசனில் முதல் தோல்வியாகவும் அமைந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனி களமிறங்க, சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சத்தம் தெறித்தது. சென்னையில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் தோனி களமிறங்க முடியாமால் போனது. இதனால் மைதானத்திற்கு வந்து இருந்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்றைய போட்டியில் ஜடேஜாவிற்கு முன்பு களமிறங்கினார் தோனி. அந்த சமயத்தில் மைதானத்தில் 125 டெசிபல் சத்தத்தை பதிவு செய்தன. இதனால் சத்தம் தாங்க முடியாமல் காதுகளை மூடினார் கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Russell couldn't hear anything
Whistle power pic.twitter.com/dFY3Mx88Y3
— (@Mahiyank_78) April 8, 2024
Harsha bogle on air:
“This is a land that puts their movie stars in pedestal. But He has gained it without any re-takes.”
THALA pic.twitter.com/okCcg4mQ08
— Badri Dhoni (@badridhoni_) April 8, 2024
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ