இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முன்னதாக டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவை பழிதீர்த்துக் கொண்டது. இதனையடுத்து டெஸ்ட் தொடர் நேற்று முதல் துவங்கியது.
பிரிமிக்ஹான் மைதானத்தில் நடைப்பெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து வருகிறது. ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 80(156) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 0(9) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 25 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை குவித்தார்.
That didn't take long! England add just two to their overnight total, Mohammed Shami taking the wicket and Dinesh Karthik ensuring his drop last night wasn't too costly.
89.4 overs: Eng 287 all out.#ENGvIND LIVE https://t.co/jre8L0pd2t pic.twitter.com/4nK7d6WUiy
— ICC (@ICC) August 2, 2018
இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கியது. ஆட்டம் துவங்கியதுமே அணித்தலைவர் ஜோ ரூட் ரன்அவுட் ஆனார். இவரையடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் நின்று விளையாடுவதற்கு முன்னதாக ஸ்டவார்ட் போர்ட் 1(7) ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களுக்கு சுருண்டது.