PAK vs AUS: 307 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட்; பாகிஸ்தான் வெற்றிக்கு 308 ரன்கள் தேவை

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  ஆஸ்திரேலியா அணி 307 ரன்கள் எடுத்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 12, 2019, 06:49 PM IST
PAK vs AUS:  307 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்-அவுட்; பாகிஸ்தான் வெற்றிக்கு 308 ரன்கள் தேவை title=

18:41 12-06-2019
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 107(111) ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகம்மது அமீர் 5 விக்கெட்டும், ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டும், ஹசன் அலி, வஹாப் ரியாஸ் மற்றும் முகமது ஹபீஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து 308 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

 


16:42 12-06-2019
22.1 ஓவரில் ஆரோன் பின்ச் 82 (84) ரன்கள் எடுத்திருந்த போது, பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீர் பந்தில் அவுட் அனர்.

தற்போது நிலவரப்படி, 23 ஓவரில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

 


 

14:41 12-06-2019
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. இதனையடுத்து அந்த அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மோதிகின்றன. இந்த போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்டில் நடைபெறுகிறது. 

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 3 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளை பெற்று அட்டவணையில் 8வது இடத்தில் உள்ளது.

அதேபோல நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இந்த அணி ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. 3 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 4 புள்ளிகளை பெற்று அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது. குறிப்பாக இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் உற்சாகத்துடன் விளையாடலாம். இரண்டு அணிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் நன்றாக உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி புள்ளி பட்டியலில் முன்னேறும். இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சட்சன், நாதன் கோல்டர் நைல், ஜாஸன் பெரண்டோர்ஃப், நாதன் லைன், ஆடம் ஸம்பா.

பாகிஸ்தான்: சோயிப் மாலிக், முகமது அஃபீஸ், சர்ஃபராஸ் அகமது (கேப்டன்/விக்கெட் கீப்பர்), வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஹரீஸ் சோஹைல், பாபர் அஸாம், இமாம் உல் அக், இமத் வாசிம், ஃபாஹர் சமான், ஷதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, முகமது ஹஸ்நைன்.

Trending News