இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகமில் கடந்த ஆகஸ்ட்., 18-ஆம் நாள் துவங்கியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 161 மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா கோலியின் 103(197) அதிரடி சதத்தாலும், புஜாரா 72(208), பாண்டியா 52(52) அரைசதத்தாலும் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 110-வது ஓவரில் இந்தியா தனது ஆட்டத்தினை டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தது.
Alastair Cook and Keaton Jennings survive and the target is under 500! England are 23/0 and need 498 to win.
India are still well on top, and it's been another near-perfect day for them, headlined yet again by Virat Kohli.#ENGvIND SCORE ➡️ https://t.co/3x88SzxNtJ pic.twitter.com/ZqxkuF0eEZ
— ICC (@ICC) August 20, 2018
இதனையடுத்து 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகின்றது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்புகள் ஏதும் இன்றி 9 ஓவர்கள் முடிவில் 23 ரன்கள் குவித்துள்ளது. தற்போது அலெய்ஸ்டர கூக் 9(28), ஜென்னிங்ஸ் 13(27) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!