வெலிங்டன்: IPL 14 வது சீசனில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) கடந்த மாதம் நடந்த IPL ஏலத்தில் க்ளென் மேக்ஸ்வெல்லை ரூ .14.25 கோடிக்கு வாங்கியது.
IPL 2020 இல் மிக சுமாராக விளையாடிய மேக்ஸ்வெல்லை பஞ்சாப் கிங்ஸ் அணி, தங்கள் அணியிலிருந்து வெளியிட்டது. இப்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஒரு பகுதியாகியுள்ளார். விராட் இந்த சீசனில் மேக்ஸ்வெல்லின் கேப்டனாக இருப்பார். IPL-க்கு முன், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளரான மேக்ஸ்வெல் ஒரு பெரிய வெளிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
மேக்ஸ்வெல்லுக்கு விராட்டின் ஆதரவு கிடைத்தது
க்லென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) தனக்கு கோலியுடன் நல்ல நட்பு இருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டில் சில மனநலக் காரணங்களுக்காக தான் விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்தபோது இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான கோலி தனக்கு பெரும் ஆதரவாக இருந்ததார் என்று கூறினார்.
க்ளென் மேக்ஸ்வெல் மேலும் கூறுகையில், “அவர் எனது முடிவை வெளிப்படையாக ஆதரித்தார். ஒரு வழியில், நான் அனுபவித்துக்கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் அவர் நன்றாக புரிந்து கொண்டார். எனக்கு ஏற்பட்ட அழுத்தங்களையும் என் மேல் இருந்த அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் அவரால் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது” என்றார்.
விராட் கோலி ஆட்டத்தின் உச்சத்தில் உள்ளார்
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விராட் கோலியுடன் விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மிகவும் உற்சாகமாக உள்ளார். மேலும் அனைத்து வடிவங்களிலும் இந்திய கேப்டன் கோலி செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி கூறிய மேக்ஸ்வெல், அவர் ஆட்டத்தின் உச்சியில் உள்ளார் என்றார்.
"அவர் (கோலி) டெஸ்ட் முதல் டி 20 வரை அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். மேலும் சில காலமாக விளையாட்டின் உச்சத்தில் இருக்கிறார்" என்று க்ளென் மேக்ஸ்வெல் கூறினார்.
“விராட் கோலி (Virat Kohli) தனது விளையாட்டை சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறார். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்குறார். இந்தியாவின் கேப்டனாகும், இந்திய அணியின் மிகச்சிறந்த வீரராகவும் இருக்கும் கோலி, அவர் மீது வரும் அழுத்தத்தை அழகாக சமாளிகிறார்” என்றும் மேக்ஸ்வெல் கூறினார்.
மேக்ஸ்வெல் கோலியிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறார்
IPL-லின் போது இந்திய கேப்டனிடமிருந்து தலைமைத்துவத்தின் குணங்களை கற்றுக்கொள்ள ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் ஆசைப்படுகிறார். RCB அணியில் கோலி மேக்ஸ்வெல்லின் கேப்டனாக இருப்பார்.
32 வயதான மேக்ஸ்வெல், "போட்டிகளில் மட்டுமல்ல, பயிற்சிகளிலும் அவரது நடைமுறையையும் பழக்கங்களையும் நான் புரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். அவரது தலைமைத்துவ திறமைகளிலிருந்து நான் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.” என்றும் கூறியுள்ளார்.
ALSO READ: IPL 2021 இந்த நகரங்களில்தான் நடக்கும்: BCCI அறிவிப்பால் கடுப்பான அணிகள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR