எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவாலிஃபையர் ஒன்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த போட்டியில் பத்திரனா பந்து வீச வேண்டும் என்பதற்காக சில நிமிடங்கள் ஆட்டம் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது. இது இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனை களத்தில் இருந்த நடுவர்கள் கண்டிக்காமல் இருந்தது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது சரியா? ஐபிஎல் விதி என்ன சொல்கிறது? தோனியின் புத்திசாலித்தனமாக பார்க்கலாமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
பத்திரனாவுக்காக நிறுத்தம்
குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர்-1 போட்டியில், காயம் காரணமாக 8 நிமிடங்களுக்கு மேல் மத்திஷா களத்தில் இருந்து வெளியேறினார். அவர் சிறிதுநேரம் ஓய்வெடுத்தபிறகு களத்துக்கு திரும்பியதும், தோனி உடனடியாக இரண்டாவது ஓவரை அவரிடம் ஒப்படைத்தார். குஜராத் இன்னிங்ஸின் 16வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. பத்திரனா தனது ஸ்பெல்லின் இரண்டாவது ஓவரை வீச வந்தார். அவ்வளவுதான், இதிலிருந்துதான் சர்ச்சை ஆரம்பமானது. இதன்போது தோனிக்கும் நடுவருக்கும் இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. இறுதியில் 16வது ஓவரை பத்திரனா வீசினார். பத்திரனா ஓவர் வீச வேண்டும் என்பதற்காக தோனி போட்ட இந்த திட்டம் வெற்றியடைந்தாலும், பல முன்னாள் வீரர்கள் தோனி மற்றும் போட்டியின் கள நடுவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க | MI vs LSG: மத்வால் அசத்தல் பந்துவீச்சு...மும்பை அபார வெற்றி..! லக்னோ வெளியேறியது
ஐபிஎல் போட்டியின் விதி என்ன சொல்கிறது?
ஐபிஎல் போட்டியின் விதிகளின்படி, உள் காயத்திற்கு சிகிச்சைக்காக மைதானத்தை விட்டு வெளியேறும் வீரர் - அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் சென்று திரும்பும்போது பந்து வீச அனுமதிக்கப்படுவதற்கு முன்பு குறிப்பிட்ட நிமிடங்கள் விளையாடிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார். குஜராத் இன்னிங்ஸின் 12வது ஓவரை வீசிய பிறகு, பத்திரனா சிகிச்சைக்காக மைதானத்திற்கு வெளியே சென்றார். அவர் திரும்பி வந்ததும், தோனி அவரை 16வது ஓவர்கள் வீசச் சொன்னார். அப்போது, குஜராத் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குஜராத் அணிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டது.
தோனி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தாரா?
அப்போது, பத்திரனா பந்துவீசுவதற்கு முன்பு சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என்று தோனிக்கு போட்டி அதிகாரிகள் மற்றும் நடுவர் மூலம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பத்திரனாவிடம் பந்து வீசுவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று தோனி வாதிட்டார். ஏனெனில் தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா மற்றும் மகிஷ் திக்ஷா ஆகியோர் தங்களுக்கான 4 ஓவர்களை வீசி முடித்திருந்தனர். வேறுவழியில்லாமல் இந்த வாக்குவாதத்தால் 4-5 நிமிடங்கள் கடந்தன. இதனையடுத்து பத்திரனா பந்துவீச அனுமதிக்கப்பட்டது. இது ஆட்டத்தின் திருப்பமுனையாகவும் அமைந்தது.
நடுவர்கள் நடவடிக்கை எடுக்கலாம்
இதுபோன்ற சர்ச்சைகள் எழும்போது விதி 41.9-ன் கீழ் நடுவர்கள் குறிப்பிட்ட அணிக்கு அபராதம் விதிக்கலாம். இந்த விதியின்படி, நடுவர் பீல்டிங் அணிக்கு முதல் மற்றும் இறுதி எச்சரிக்கையை வழங்க வேண்டும். மேலும், ஓவரின் போது வேண்டுமென்றே நேரத்தை வீணடிப்பதாக அவர்கள் உணர்ந்தால், அவர்கள் அதை மீண்டும் செய்தால், பீல்டிங் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். பந்து வீச்சாளர் கூட இடைநீக்கம் செய்யப்படலாம். இருப்பினும், விதி மீறப்பட்டதா இல்லையா என்பதை இந்த நடுவர்களே தீர்மானிக்க முடியும். இதில் நடவடிக்கை எடுத்தால் சிஎஸ்கே கேப்டன் தோனி இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல்கூட போகலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
மேலும் படிக்க | அம்பயர்களுடன் விவாதம்! ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ