பாரதம்: கார்த்திக் சிதம்பரம் ஆதரவு
மயிலாடுதுறை திருஇந்தளூரில் பகுதிக்கு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சென்றார். அங்கு கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலய நிர்வாகம் சார்பில் எம்பிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம் எம்பி, நடைமுறை பேச்சு வழக்கில் இந்தியாவை பாரதம் என அழைப்பது வழக்கம் தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் பாரத் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்
அரசியலமைப்பில் பாரத்
ஒன்றிய அரசு அதிகாரபூர்வமாக பாரத் என மாற்ற நினைத்தால் பல்வேறு சிக்கல்கள் வரும். உதாரணமாக வங்கிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டால் அனைத்து பணத்தையும் திரும்ப கொடுக்க வேண்டிய நிலை உண்டாகும். பேச்சுவாக்கில் பாரத் என அழைப்பது தவறு இல்லை. அதிகாரப்பூர்வமாக மாற்ற நினைத்தால் பெரும் பொருட் செலவு ஏற்படும். நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு சாத்தியப்படாது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வருடத்திற்கு 3 ,4 தேர்தல் வருவது தான் சிறந்தது. அப்போது தான் மக்களின் மன ஓட்டத்தை அரசியல் பிரமுகர்கள் புரிந்து கொள்ள முடியும்.
சனாதனம் ஒழியணும்
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. சனாதனம் என்பது சமுதாயத்தில் உள்ள சாதியை ஏற்றத்தாழ்வுகளை மட்டும் தான் குறிக்கிறது. இறை வழிபாட்டிற்கு எதிராக சனாதன ஒழிப்பு மாநாட்டில் யாரும் பேசவில்லை. சாதிகள் இல்லாமல் சமுதாயம் அமைய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்.
தமிழ்நாட்டில் இதுதான் அர்த்தம்
பாஜக தலைவர் அண்ணாமலை புதியதாக சனாதனத்திற்கு கொடி பிடிக்கிறார். சனாதனம் என்பது சாதிய பிரிவுகளை மட்டும் தான் குறிக்கிறது. எந்த ஒரு மத வழிபாட்டையும் குறிக்கவில்லை. மற்றவர்கள் சனாதனத்திற்கு சொல்லும் அர்த்தம் எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை. அதற்கான அர்த்தம் வேண்டுமென்றால் வட மாநிலத்தில் வேறு மாதிரி இருக்கலாம்" என கூறினார்.
மேலும் படிக்க | ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ