3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர் ஸ்டாலின்

இரண்டு நாட்களாக சென்னையை விட கோவையில் பதிவாகியுள்ள தொற்றின் அளவு அதிகமாக உள்ளது. இன்று சென்னையில் தொற்றின் அளவு 3000-விட குறைந்துள்ள நிலையில் கோவையில் 4000-ஐத் தாண்டியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2021, 12:01 AM IST
  • இரண்டு நாட்களாக சென்னையை விட கோவையில் பதிவாகியுள்ள தொற்றின் அளவு அதிகமாக உள்ளது.
  • கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்-தமிழக அரசு.
  • தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர் ஸ்டாலின் title=

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆறு நாட்களாக ஒரு நாள் தொற்றின் அளவு குறைந்துகொண்டு வருகிறது. இது ஆறுதல் தரும் விஷயமாக காணப்பட்டாலும், தற்போது பதிவாகி வரும் எண்ணிக்கையும் மிகவும் அதிகமானதுதான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. தமிழகத்தில் மொத்தமாகவும் சென்னையிலும் ஒரு நாள் தொற்று அளவில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், சில மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு கணிசமாக அதிகரித்து வருகின்றது. 

இரண்டு நாட்களாக சென்னையை (Chennai) விட கோவையில் பதிவாகியுள்ள தொற்றின் அளவு அதிகமாக உள்ளது. இன்று சென்னையில் தொற்றின் அளவு 3000-விட குறைந்துள்ள நிலையில் கோவையில் 4000-ஐத் தாண்டியுள்ளது. கோவையில் மட்டுமல்லாமல் கொங்கு மண்டல பகுதிகளான திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

 இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்று தொற்று எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. 

ALSO READ: கொரோனா தடுப்பூசி மையம், சிகிச்சை மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் 

நிலைமையை சரி செய்ய கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்களுடன் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஆலோசனை நடத்தினார். தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கும் இந்த மாவட்டங்களில் தொற்று பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும், தடுப்பூசி செயல்முறையை முடுக்கி விடவும், விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தொற்று பரவல் அதிகமாக உயர்ந்துகொண்டிருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கொரோனா (Coronavirus) தடுப்பு பணிகளுக்காக தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கொரோனா நிவாரணப் பணிகளை கண்கானிக்க கோவையில் சித்திக்கும், திருப்பூரில் சமயமூர்த்தியும், ஈரோட்டில் செல்வராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதிகளுக்கான கொரோன தடுப்பு பணிகள், அனைத்து மட்ட ஒருங்கிணைப்பு பணிகள் ஆகியவற்றை மெற்கொள்வார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இதற்கிடையில், வியாழான்று தமிழ்நாட்டில் 33,361 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 19,78,621 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 474 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 22,289 ஆக உள்ளது. 

ALSO READ:COVID-19 Update: தமிழகத்தில் இன்று 33,361 பேர் பாதிப்பு, 474 பேர் உயிர் இழப்பு!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News