ஜியோ யூஸ் பண்றீங்களா? இந்த ரீசார்ஜ் செய்தால் நெட்பிலிக்ஸ் இலவசமாக பெறலாம்!

ஜியோ கூடுதலாக ஓடிடி சந்தையில் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான இலவச மற்றும் கூடுதல் ஜியோ பிரைம் நன்மைகளை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 7, 2023, 01:43 PM IST
  • ஜியோ ரூ.399 திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 75ஜிபி டேட்டாவை வழங்குகிறது,
  • ஜியோ ரூ.599 திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு 100ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.
  • ஜியோ ரூ.799 திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு 150ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ யூஸ் பண்றீங்களா? இந்த ரீசார்ஜ் செய்தால் நெட்பிலிக்ஸ் இலவசமாக பெறலாம்!  title=

ஜியோ நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.  ஜியோ இப்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில்  அன்லிமிடெட் அழைப்பு மற்றும் அதிவேக 5G டேட்டாவை வழங்குகிறது.  இந்நிலையில் தற்போது ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இலவச நெட்ப்ளிக்ஸ் சந்தாவையும் வழங்குகிறது.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜியோவின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் எண்ணற்ற படங்களை கண்டு மகிழலாம்.  5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் புதிதாக வெளியான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றை பார்த்து ரசிக்கலாம்.  தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் கட்டணமின்றி ஓடிடி செயலியின் நன்மைகள் கிடைக்கிறது.  ஜியோ கூடுதலாக ஓடிடி சந்தையில் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான இலவச அணுகல் மற்றும் கூடுதல் ஜியோ பிரைம் நன்மைகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | 107 ரூபாய்க்கு 60 நாட்களுக்கு வேலிடிட்டி, டேட்டா, இலவச அழைப்பு என அசத்தும் BSNL

ஜியோ ரூ.399: இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 75ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் ஒரு ஜிபி-க்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது.  ஓடிடி நன்மைகளில் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் சந்தா ஆகியவை கிடைக்கிறது.  ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் நன்மைகளையும் ஜியோ வழங்குகிறது, 5ஜி சேவையும் கிடைக்கிறது.

ஜியோ ரூ.599: இந்தத் திட்டமானது 100ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது, அதன்பிறகு ஒரு ஜிபி-க்கு ரூ.10, அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் குடும்பத் திட்டத்தின் கீழ் கூடுதல் ஜியோ சிம் ஆகியவற்றை வழங்குகிறது.  இலவச ஓடிடி தொகுப்பில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் ஜியோ பயன்பாடுகள் உள்ளன.

ஜியோ ரூ.799: 150ஜிபி மொத்த டேட்டாவுடன், ஒரு ஜிபி-க்கு ரூ.10 செலவாகும், ஜியோ குடும்பத் திட்டத்தின் கீழ் இரண்டு கூடுதல் ஜியோ சிம்களை வழங்குகிறது.  நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாக்களுடன் பயனர்கள் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளைப் பெறலாம்.

ஜியோ ரூ 999: இந்தத் திட்டத்தில் 200ஜிபி டேட்டா கிடைக்கும், குடும்பத் திட்டத்தின் கீழ் மூன்று ஜியோ சிம்களுடன் ஒரு ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது.  இந்த போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டமும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

ஜியோ ரூ.1,499: ஜியோ வழங்கும் மிகவும் விலையுயர்ந்த போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டம் இதுவாகும், இதில் பயனர்களுக்கு 300ஜிபி மொத்த டேட்டா அடங்கும்.  இதில் ஒரு ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

மேலும் படிக்க: இந்த சோலார் ஜெனரேட்டர் உடனே வாங்குங்க, எலக்ட்ரிசிட்டி பில் வராது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News