மஹிந்திரா வழங்கும் மாபெரும் தள்ளுபடி: மஹிந்திரா & மஹிந்திரா மே 2022 இல் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ரூ. 80,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது.
அவை இந்த மாத இறுதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மஹிந்திரா இந்த அனைத்து சலுகைகளையும் பொலேரோ, ஸ்கார்பியோ, எக்ஸ்யுவி300, கெயுவி100 என்எக்ஸ்டி, மராஸோ மற்றும் அல்டுராஸ் ஜி4 ஆகியவற்றில் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யுவி தார் மற்றும் எக்ஸ்யுவி700 ஆகியவற்றில் எந்த தள்ளிபடியும் வழங்கப்படவில்லை.
மஹிந்திரா பொலேரோ
மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பமான பொலிரோவில் ரூ.19,000 வரை மொத்த சலுகைகளை வழங்கியுள்ளது. இதில் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.6,000 வரையிலான தனிச் சலுகைகள் ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான பைக்குகளை வாங்கணுமா? சிறந்த பைக்குகளின் பட்டியல் இதோ
மஹிந்திரா கெயுவி100 என்எக்ஸ்டி
மஹிந்திரா & மஹிந்திரா இந்த சிறிய அளவிலான எஸ்யூவியில் ரூ.37,190 வரை சலுகைகளை வழங்கியுள்ளது. இதில் ரூ.14,190 வரை ரொக்க தள்ளுபடிகள், ரூ.3,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் ஆகியவை கிடைக்கும்.
மஹிந்திரா எக்ஸ்யுவி300
இந்த காருக்கு ரூ.7,581 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.10,000 வரை இலவச ஆக்சஸரீஸ், ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.4,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ.46,581 வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா ஸ்கார்பியோ
வாடிக்கையாளர்களின் விருப்பமான ஸ்கார்பியோ எஸ்யூவியில் ரூ.27,320 வரை மொத்த சலுகைகளை மஹிந்திரா வழங்கியுள்ளது. இதில் ரூ.13,320 வரை இலவச ஆக்சஸரீஸ், ரூ.4,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை கிடைக்கும்.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4
மஹிந்திரா அல்டுராஸ் மஹிந்திராவின் மிகவும் விலையுயர்ந்த எஸ்யுவி ஆகும். இதில் நிறுவனம் ரூ.81,500 வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகைகளில் ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.11,500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ் ஆகியவை கிடைக்கும்.
மஹிந்திரா மராஸ்ஸோ
மஹிந்திரா மராஸ்ஸோவின் வாடிக்கையாளர்கள் ரூ.55,200 வரை பலன்களைப் பெறலாம். இதில், அடிப்படை எம்2 டிரிம்மில் ரூ.20,000 வரை ரொக்க தள்ளுபடியும், மீதமுள்ள டிரிம்களுக்கு ரூ.15,000 ரொக்க தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மகிந்திரா நிறுவனம் இந்த காருக்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,200 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவற்றையும் வழங்குகிறது.
மேலும் படிக்க | எலக்டிரிக் கார் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான 4 முக்கியமான டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR