சாக்லேட் ஹீரோ ஜூவாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் கீ, இபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது பற்றி ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஜீவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் படம் கீ. அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்குகிறார். இப்படத்திணை சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டு, படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டுமே மிகுந்த வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் மூன்றாவது போஸ்டர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு, கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த 'விஸ்வரூபம்' திரைப்படம், பல தடைகளுக்குப் பிறகு வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, 2-ம் பாகத்துக்கான 40 சதவிகிதத்தை கமல்ஹாசன் எடுத்துவிட்டார்.
2-ம் பாகம் எடுப்பதில் இவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கும் இடையில், உரிமை தொடர்பாக சில பிரச்னைகள் இருந்ததால், வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில், கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் 'தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 'விஸ்வரூபம்-2' படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும்' என்று தெரிவித்துள்ளார்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.
'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இருவருமே தங்களுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தார்கள். இப்படத்தை சசிகாந்த் தயாரிக்க முன்வந்தார்.
'விக்ரம் வேதா' எனத் தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இருவருமே தங்களுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தார்கள். இப்படத்தை சசிகாந்த் தயாரிக்க முன்வந்தார்.
'விக்ரம் வேதா' எனத் தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.