இலங்கை அரசியலில் திருப்பம்: PM பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே...

இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில், அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து,  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராஜபக்சே.

Last Updated : Dec 15, 2018, 12:31 PM IST
இலங்கை அரசியலில் திருப்பம்: PM பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே... title=

இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில், அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து,  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராஜபக்சே.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன. பின்னர் ரணிலுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றதாலும், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாததாலும் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டார். 
 
தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது, இதைத்தொடர்ந்து சில நாட்கள் நாடாளுமன்ற அவை கூடிய நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக ரணில் தரப்பு சபாநாயகர் அறிவித்தார். மேலும், அடுத்தடுத்த நாட்கள் நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது. தொடர்ந்து ரணில் தரப்பினரின் தீவிர முயற்சியால் பெரும்பான்மை அடிப்படையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. 

இதையடுத்து, அதிபர் மகிந்த ராஜபக்சேவை அந்நாட்டு பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தது செல்லாது என்றும் மேலும் அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும்  இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

 

Trending News