COVID-19 பாதிப்பை சாமாளிக்க பாதிப்பை சமாளிக்க முன்பு எப்போதும் இல்லாத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
"கடன்களுக்கான தவணையை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட ஒத்திவைப்பு சலுகை தற்காலிக தீர்வு தான். COVID-19 தொடர்பான பிரச்சனைகளால் அவதிபடுபவர்களுக்கு தீர்வை நோக்கிய நடவடிக்கைகள் நீண்ட கால பலனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று தாஸ் கூறினார்.
COVID-19 இன் பொருளாதார தாக்கத்தை அளவிடுவது கடினம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகிறார், வங்கித் துறை பாதுகாப்பானது என்றும் அவர் உறுதி கூறினார்.
புதுடெல்லி: வியாழக்கிழமை Unlock BFSI 2.0 என்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ், இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் கோவிட் -19 ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தை அளவிடுவது கடினமாக உள்ளது, ஆனால் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது, என சக்திகாந்த தாஸ் கூறினார்.
COVID-19 நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் COVID19 காரணாமான ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட சூழ்நிலையைச் சமாளிக்கும் நோக்கம் கொண்டவை, அவை நிரந்தரமான தீர்வாக இருக்க முடியாது, ”என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவில் வங்கித் துறை தொடர்ந்து பாதுகாப்பாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தினார்.
"சமீபத்திய ஆண்டுகளில் வங்கி துறையில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. இந்தியாவின் வங்கித் துறை தொடர்ந்து சிறப்பான, பாதுகாப்பான துறையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில், வங்கித் துறை, வளர்ந்து வரும் தொழில் துறைகளை ஊக்குவித்து ஆதரவை அளிக்க வேண்டும்”என்றும் அவர் கூறினார்.
Credit-Debit கார்டு தொடர்பான 4 விதிகளில் பெரிய மாற்றம்....