விமான பயணிகளுக்கு கொரோனா என்ற செய்தி உண்மையில்லை: ஏர் இந்தியா விளக்கம்

இத்தாலியிலிருந்து அமிருதசரஸ் வந்த ஏர் இந்தியா விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2022, 05:01 PM IST
விமான பயணிகளுக்கு கொரோனா என்ற செய்தி உண்மையில்லை: ஏர் இந்தியா விளக்கம் title=

ரோமில் இருந்து அமிருதசரஸ் வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ANI செய்து ஊடகம் ட்வீட் செய்திருந்தது. ஆனால், தற்போது ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில், இச்செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது, கொரோனா தொற்று உறுதி என வெளியான செய்தி உண்மையில்லை, அது தவறானது என ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இத்தாலியிலிருந்து அமிருதசரஸ் வந்த ஏர் இந்தியா விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் வி.கே சேத் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பாமல் இருப்பதை உறுதிசெய்ய ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட் 19 (COVID-19) பரிசோதனையை அதிகரிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆர்த்தி அஹுஜா, அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை மற்றும் நேர்மறை விகிதங்களுக்கு மத்தியில் கோவிட்-19 சோதனையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். 

போதுமான பரிசோதனை (Corona Testing) இல்லாத நிலையில், சமூகத்தில் பரவும் நோய்த்தொற்றின் உண்மையான அளவைக் கண்டறிவது சாத்தியமாக இருக்காது என்றும் அஹுஜா ஜனவரி 5 தேதியிட்ட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ 

இதற்கிடையில், இந்தியாவில் நேற்று 90,928 பேர் புதிதாக கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், 325 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து மொத்த இறப்பு எண்னிக்கை 4,82,876 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (ஜனவரி 6, 2022) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 2,85,401 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 71,397 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  19,206 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த மீட்பு எண்ணிக்கை 3,43,41,009 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று புதிதாக 495 பேர் ஓமிக்ரான் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது பதிவாகியுள்ளது. இது நாட்டில் மொத்த ஓமிக்ரான் (Omicron) பாதிப்பு எண்ணிக்கையை 2,630 ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 995 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ | எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News