பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு செயலாளராக 13 ஆண்டுகள் பொறுப்புவகித்த ராம்லால் மீண்டும் RSS-க்கு திரும்பியதால் அந்த பதவியில் பி.எல்.சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்!
மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் தேசிய அமைப்பு செயலாளராக 13 ஆண்டுகள் பொறுப்புவகித்தவர் ராம்லால். இவர் தாய்க்கழகமான RSS இயக்கத்துக்கு நேற்று மீண்டும் திரும்பிச் சென்றதால் அந்த பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், அந்த பொறுப்பில் பி.எல்.சந்தோஷ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பினை அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா இன்று பிறப்பித்தார்.
இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.சந்தோஷ் இதற்கு முன்னர் 8 ஆண்டுகள் கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளராகவும், பின்னர் 2014-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பாஜக மேலிடப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
BL Santosh, Joint General Secretary Organisation has been appointed National General Secretary Organisation of Bharatiya Janata Party (BJP). pic.twitter.com/711zBlzh6I
— ANI (@ANI) July 14, 2019
தற்போது அக்கட்சியின் தேசிய இணை பொதுச் செயலாளராக இருந்த பி.எல்.சந்தோஷுக்கு இந்த பதவி உயர்வை அமித் ஷா அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.