புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பெரும் எழுச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. முதல் தாக்குதலில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், மீண்டும் கோவிட் -19 நோயின் இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கியுள்ளது.
இரண்டாவது அலையில் நோய்த்தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் செவ்வாய்க்கிழமையன்று 115,736 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத தினசரி பாதிப்பு நிலவரம் என்பது கவலையளிக்கிறது.
மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 55,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் 9,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் தலா 5,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
Also Read | Amazing! இதயத்துடிப்பு, சுவாச வீதத்தை அளவிட உதவும் ஸ்மார்ட்போன் கேமரா
கொரோனா வைரஸின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அடுத்த நான்கு வாரங்கள் நாட்டுக்கு "முக்கியமானவை" என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கோவிட்-19இன் தாக்கத்தை விட கடுமையானது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நோய்த்தொற்று அறிகுறிகளை உருவாக்கும் விதத்தில் மாற்றத்தை தெரிவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
Also Read | பழைய மற்றும் அழித்த WhatsApp செய்திகளை மீண்டும் கொண்டுவர Tips and Tricks
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR