Digital Voter ID Card: முக்கியத்துவம் என்ன? பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ

Digital Voter ID Card: e-EPIC என்பது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பாகும். வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் இதை அணுகலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2022, 01:08 PM IST
  • e-EPIC-ஐ கையடக்க ஆவண வடிவில் (PDF) பதிவிறக்கம் செய்யலாம்.
  • நீங்கள் e-EPIC-ஐ பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் வடிவிலும் வைத்துக்கொள்ளலாம்.
  • EPIC-ஐ மொபைல் சாதனத்தில் அல்லது கணினியில் சுயமாக அச்சிடக்கூடிய வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
Digital Voter ID Card: முக்கியத்துவம் என்ன? பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ  title=

புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் பல கட்ட தேர்தல்களுக்கான நேரம் இது. மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (e-EPIC) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதித்து, வாக்களர்களுக்கு தேர்தல் ஆணையம் பெரிய உதவியை செய்துள்ளது. ஒருவரது பிசிக்கல், அசல் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால், இந்த மின் டிஜிட்டல் வாக்காளர் அட்டை மிக உதவியாக இருக்கும். 

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்ட நிலையில், ஒருவர் நகல் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒருவரது முகவரியையும் புதுப்பிக்கலாம். ஆகையால், ஒருவர் தான் வசிக்கும் நகரம் அல்லது மாநிலத்தை மாற்றும் சூழ்நிலையில், ஒவ்வொரு முறையும் புதிய அட்டையை உருவாக்க வேண்டியதில்லை. ஆன்லைனில் முகவரியை மாற்றி, புதுப்பிக்கப்பட்ட முகவரியுடன் புதிய வாக்காளர் ஐடியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

e-EPIC என்றால் என்ன

e-EPIC என்பது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிப்பாகும். வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் இதை அணுகலாம். e-EPIC என்பது EPIC இன் பி.டி.எஃப் பதிப்பாகும். வாக்காளர்கள் தங்கள் கார்டுகளை மொபைல் போன்களில் சேமித்து வைக்கலாம், டிஜி லாக்கர்களில் பதிவேற்றலாம் அல்லது அச்சிட்டு தாங்களாகவே லேமினேட் செய்து வைத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: இதை செய்யவில்லை என்றால் பென்ஷன் கிடைக்காமல் போகலாம்

வாக்காளர் அடையாள அட்டையை இந்த வழியில் பதிவிறக்கவும்
வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள் இதோ: 

- டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voterportal.eci.gov.in அல்லது https://nvsp.in/ -க்கு செல்லவும். 
- உங்கள் NVSP கணக்கில் லாக் இன் செய்யவும் அல்லது பதிவு செய்யவும்
- லாக் இன் செய்ய, உங்களிடம் ஒரு கணக்கு இருக்க வேண்டும்
- மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைக் கொண்டு (உங்களிடம் ஏற்கனவே கணக்கு இல்லையென்றால்) ஒரு கணக்கை உருவாக்கலாம்
- உங்கள் கணக்கை உருவாக்கிய பிறகு நீங்கள் சில விவரங்களை உள்ளிட வேண்டும்
- நீங்கள் அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு லாக் இன் ஐடி உருவாக்கப்படும்
- இப்போது லாக் இன் செய்யவும். 
- லாக் இன் செய்த பிறகு, EPIC எண் அல்லது படிவ குறிப்பு எண்ணை உள்ளிட்டு, பின்னர் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் தகவலைச் சமர்ப்பித்தவுடன், நீங்கள் ஒரு முறை கடவுச்சொல்லைப் (ஓடிபி) பெறுவீர்கள்
- ஓடிபி-ஐ உள்ளிடவும், e-EPIC பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்
- பதிவிறக்க e-EPIC இணைப்பைக் கிளிக் செய்யவும்
- வாக்காளர் அடையாள அட்டையின் பி.டி.எஃப் ஆவணம் பதிவிறக்கம் செய்யப்படும்
- நீங்கள் இந்த ஆவணத்தை சேவ் செய்து வைக்கலாம் அல்லது பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 10 பிப்ரவரி முதல் இந்த கட்டணங்கள் உயர்கின்றன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News