திருவனந்தபுரம்: கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் நேற்றுடன் (மே 19) முடிந்தது. மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி வேலூர் தொகுதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுடன் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. நாடு ழுமுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருப்பதையே பெரும்பாலும் ஊடங்களின் கருத்து கணிப்பு ஆகா உள்ளது.
ஜி நியூஸ் (ZeeMahaExitPoll) கருத்து கணிப்புப் படி, 542 இடங்களில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 308 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 117 இடங்களும், மற்றவர்கள் 117 இடங்களைப் பெறுவார்கள் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது என Zee News செய்தி ஊடகம் கணிப்பு செய்துள்ளது. அதேபோல பெரும்பாலும் பாஜக-வே முன்னணி பெரும் என கருத்து கணிப்புக்கள் வெளியாகி உள்ளன.
![ZeeMahaExitPoll](https://scontent-sin2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/60583505_585053735317179_5799853661047750656_n.png?_nc_cat=102&_nc_ht=scontent-sin2-2.xx&oh=b8a768f56161e3dd182a4f0529ac8ede&oe=5D9ACD0E)
இந்நிலையில், ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளை குறித்து பேசிய கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் எப்பொழுதும் சரியாக இருந்ததில்லை. தவறாகவும் இருந்திருக்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புக்கள் வெளியாகின. ஆனால் என்ன நடந்தது. கருத்துக் கணிப்புக்கள் பொய்யானது. அதனால் உண்மையான முடிவுக்காக மே 23 ஆம் தேதி வரை காத்திருப்போம் எனக் கூறினார்.
அதேபோல கேரளாவில் நாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் கூறினார்.