Gold Rates Today: உயரத் தொடங்குகிறது தங்கத்தின் விலை, இப்போதே வாங்கினால் லாபம் காணலாம்

தங்கத்தின் விலை தேசிய அளவில் இன்று 100 கிராமுக்கு ரூ .2,500 அதிகரித்துள்ளது. 10 கிராமுக்கான தங்கத்தின் விலை ரூ .250 அதிகரித்துள்ளது. இதுவரை ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2021, 11:23 AM IST
  • தேசிய அளவில் இன்று தங்கம் 100 கிராமுக்கு ரூ .2,500 அதிகரித்துள்ளது.
  • பல்வெறு இடங்களில் வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது.
  • சென்னையில் 22 காரட் தங்க விலை ரூ .43,450 ஆக உள்ளது.
Gold Rates Today: உயரத் தொடங்குகிறது தங்கத்தின் விலை, இப்போதே வாங்கினால் லாபம் காணலாம்  title=

Gold Rate Today, April 9, 2021: தங்கத்தின் விலை தேசிய அளவில் இன்று 100 கிராமுக்கு ரூ .2,500 அதிகரித்துள்ளது. 10 கிராமுக்கான தங்கத்தின் விலை ரூ .250 அதிகரித்துள்ளது. இதுவரை ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .44,550 ஆகவும் 100 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 4,45,500 ரூபாயாகவும் உள்ளது. 

10 கிராம் 24 காரட் தங்கம் இன்று 45,550 ரூபாய்க்கும் 100 கிராம் 24 காரட் தங்கம் 4,55,500  ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது. 

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரத்தைக் காணலாம்: 

ALSO READ: Gold Rates Today: நிலைகொள்ளாமல் தத்தளிக்கும் தங்க விலையில் மீன் பிடிக்கும் காலம் இதுதான்

சென்னையில் 22 காரட் தங்க விலை (Gold Rate) ரூ .43,450, மும்பையில் ரூ .44,550, புனேவில் ரூ .44,550, நாக்பூர் ரூ .44,550. டெல்லியில் ரூ .45,150 பெங்களூரில் ரூ .43,000, ஹைதராபாத்தில் ரூ .43,000. கொல்கத்தாவில் ரூ .45,430 ஆக உள்ளது. 

24 காரட் தங்கத்தின் (Gold) விலை  சென்னையில் ரூ .47,400, மும்பையில் ரூ .45,550, புனேவில் ரூ .45,550, நாக்பூர் ரூ .45,550, டெல்லியில் ரூ .49,250 பெங்களூரில் ரூ .46,900, ஹைதராபாத்தில் ரூ .46,900 கொல்கத்தாவில் ரூ .48,130 ஆக உள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 22 காரட் மற்றும் 24 காரட் தங்க விலைகளில் சரக்கு மற்றும் சேவை வரி (GST), TCS மற்றும் பிற வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். செய்கூலி மற்றும் சேதாரத்தைப் பொறுத்து பல்வேறு நகைக் கடைகளில் தங்கத்தின் விலை வேறுபடலாம்.

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News