டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு தற்போது ஒரு பெரிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது, அதாவது அடுத்த மாதம் முதல் புதிய டிரைவிங் லைசென்ஸ் பெறுவது சற்று கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் ஓட்டுநர் சோதனைத் தடங்கள் தானியங்கு முறையில் மாறப்போகிறது. டெல்லியில் மொத்தம் 13 டிரைவிங் டெஸ்ட் டிராக்குகள் உள்ளன, இதுவரை 12 ட்ராக்குகள் தானியங்கி முறையில் இயக்கப்பட்டுள்ளன. டெல்லி மட்டுமின்றி இன்னும் சில மாநிலங்களிலும் தானியங்கி ஓட்டுநர் சோதனை தடங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கு டிராக்குகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சென்சார்களின் கண்காணிப்பில் இருப்பதால், தானியங்கி பாதையில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவது சற்று கடினமாக இருக்கும். அதேசமயம் இந்த தானியங்கி ஓட்டுநர் சோதனையில் உங்களுக்கு பல நன்மைகளும் கிடைக்கப்பெறும்.
மேலும் படிக்க | பிப்ரவரியில் வங்கிகள் 10 நாட்கள் இயங்காது! RBI அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி ஓட்டுநர் சோதனைப் பாதை தொடங்கப்பட்டது. நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு முன் விண்ணப்பதாரர்களின் ஓட்டுநர் திறன்களை சரியான முறையில் சோதிப்பதற்காகவே இந்த முறை செயல்படுத்தப்பட இருக்கிறது. இது தவிர, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ஊழலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த முறை இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. தானியங்கி ஓட்டுநர் சோதனை முறையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் உள்ளது.
டெல்லியின் அனைத்து சோதனை தடங்களும் தானியங்கு முறையில் செயல்படுத்தப்பட்ட பிறகு இதில் எந்தவொரு நபராலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இதற்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற முழுத் தேர்விலும் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தானியங்கு முறையில் சோதனை தடங்களை அமைப்பதன் மூலமாக தகுதியற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் கொடுப்பது தவிர்க்கப்படுவதோடு, சாலை விபத்துக்களும் குறையும். முதல் முறையிலேயே சோதனையில் தேர்ச்சி பெற முடியாத நபர்கள் தாராளமாக இந்த தானியங்கி சோதனை பாதையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தானியங்கு சோதனை தடங்களில் அமைக்கப்பட்ட சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் 24 அளவுருக்கள் மூலம் விண்ணப்பதாரர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | பட்ஜெட் 2023; ரயில்வே முக்கிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ