Traffic Rules: நாட்டில் தற்போது கோடை காலம் நடந்து வருகிறது. இதுபோன்ற வானிலையில் பெரும்பாலானோர் ஹாஃப் ஷர்ட் மற்றும் டி-ஷர்ட்களையே பயன்படுத்துகின்றனர். பைக் ஓட்டும்போது பலர் இதுபோன்ற திறந்த மற்றும் காற்றோட்டமான ஆடைகளை அணிய விரும்புகிறார்கள்.
இந்தியா உலகின் மிகப்பெரிய இருச்சக்கர வாகன சந்தைகளில் ஒன்றாகும். மேலும், இருச்சக்கர வாகனங்கள் தொடர்பாக பல விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் செய்யப்பட்டுள்ளன. இதுசார்ந்த பல வதந்திகளும் சமூக வலைதளங்களில் சுற்றிவருகின்றன, அவை அனைத்தும் உண்மையல்ல.
அத்தகைய விதிகளில் ஒன்று அரை சட்டை அல்லது டி-சர்ட் அணிந்து பைக் ஓட்டினால் உங்களுக்கு அபராதம் என்பதாகும். இது முற்றிலும் உண்மையல்ல. இந்த தவறான தகவல் சமூக ஊடகங்களில் மிகவும் பொதுவாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | முதல் முறையாக ஏசி வாங்க போறிங்களா? இத கண்டிப்பா மறக்காதிங்க!
இதுதான் உண்மை
நாட்டில் போக்குவரத்து விதிகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த விதிகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இருப்பினும், அரைச்சட்டை அல்லது டி-சர்ட் அணிந்து பைக் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி ஏதும் இல்லை. இது தொடர்பாக, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகம் 2019இல் வெளியிட்ட ட்வீட்டில், தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தில் (2019ல் கொண்டு வரப்பட்ட) அரைக்கை சட்டை அல்லது டி-சர்ட் அணிந்து பைக் ஓட்டுவதற்கு அபராதம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புகள்?
அரைச்சட்டை அணிந்து பைக் ஓட்டுவதற்கு அபராதம் இல்லாவிட்டாலும், வெயிலில் அரைச்சட்டை அல்லது டி-சர்ட் அணிந்து பைக்/ஸ்கூட்டர் ஓட்டினால் கண்டிப்பாக சில பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில் அதுபோன்ற சமயங்களில் அதிகப்படியான சருமம் பாதிப்படைகிறது. வெப்பம் மற்றும் வலுவான காற்றினால் உங்கள் உடல்நலனுக்கு சேதம் ஏற்படலாம். முழுச் சட்டை அணியும் போது கண்டிப்பாக உங்கள் கையின் தோல் பாதிக்கப்படாமல் இருக்கும்.
தொடர்ந்து, இந்தியா முழுவதும் ஹெல்மெட் போட்டுச்சென்றாலும், அது முறையான ஹெல்மெட்டாக இல்லையென்றாலும், அதனை முறையாக அணியவில்லை என்றாலும் உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் பைக்கில் முன்னே ஓட்டிச்செல்பவர்கள் மட்டுமின்றி, பின்பக்கம் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. மேலும், இருச்சக்கர வாகனம் என்பது இருவர் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே, இரண்டு பேருக்கு மேல் பைக்கில் பயணிப்பது அபராதத்திற்குரிய குற்றமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ