செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம், கேட்டது கிடைக்கும்

Mars Transit: செவ்வாய் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 10, 2022, 11:42 AM IST
  • செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • செவ்வாய்ப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களைத் தரும்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.
செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம், கேட்டது கிடைக்கும் title=

செவ்வாய் பெயர்ச்சி ஆகஸ்ட் 2022: ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாறும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகமும் இவற்றில் ஒன்றாகும். மேலும் செவ்வாயின் ராசி மாற்றம் வாழ்க்கையின் பல முக்கிய அம்சங்களை பாதிக்கிறது. இன்று, ஆகஸ்ட் 10, 2022 அன்று, செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்குள் நுழைகிறது. செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் காணப்படும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று வரை செவ்வாய் மேஷ ராசியில் ராகுவுடன் இணைந்து பலரது வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தது. எனினும், இப்போது சுக்கிரனுக்குச் சொந்தமான ரிஷப ராசியில் நுழைந்து சுப பலன்களைத் தரத் தொடங்கும். இந்த செவ்வாய் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அருள் மழை பொழியும்

ரிஷபம்:

செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்கார்ரகள் பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறலாம். தொழிலில் நல்ல காலம் தொடங்கும்.

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி இன்று: 5 ராசிகளுக்கு மோசமான பலன்கள்! இந்த பரிகாரங்களை செய்யலாமே 

கடகம்:

செவ்வாயின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய, நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். நீங்கள் கடன் தொல்லையில் இருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

சிம்மம்:

செவ்வாய்ப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களைத் தரும். பல தரப்புகளிலிருந்து பணம் ஈட்ட பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதை இப்போது செய்யலாம். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழில்-வியாபாரமும் நன்றாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் முடிந்து மகிழ்ச்சி பிறக்கும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தனுசு ராசிக்காரர்கள் கையில் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். இது ஒரு பொன்னான நேரம் என்பதை உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களால் அறிந்துகொள்வீர்கள். 

(பொஉப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை) 

மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம், தொட்டது துலங்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News