புதன் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் இயக்கங்களையும் மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்கள், இயக்க மாற்றங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சிகள், வக்ர நிவர்த்தி என அனைத்தும் அனைத்து 12 ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவை சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும்.
ஆகஸ்ட் 24 அன்று, புதன் சிம்மத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். செப்டம்பர் 15 வரை அவர் இந்த நிலையில் இருக்கப் போகிறார். புதன் புத்திசாலித்தனம், வணிகம் மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். புதனின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன. இவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. புதனின் வக்ர இயக்கம் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் அளிக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
புதனின் வக்ர பெயர்ச்சியால் அதிக நன்மைகளை பெறப்போகும் ராசிகள்
கடக ராசி
ஜோதிடத்தின் படி, புதனின் வக்ர இயக்கம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தந்துள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள், கடக ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் சொத்து போன்றவற்றில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் இந்த நேரத்தில் புதிய பொறுப்ப்புகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | சனியால் குபேர யோகம்.. அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லும் ராசிகள்
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பலனளிக்கும். புதனின் வக்ர சஞ்சாரம் காரணமாக பண ஆதாயங்கள் உண்டாகும். சமூகத்தில் மரியாதை கூடும். அதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிக புகழ் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் தொழிலில் மாற்றத்தை செய்ய நினைத்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.
மிதுன ராசி
புதன் மிதுன ராசிக்கு அதிபதி ஆவார். இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி மிகுந்த பலன்களைத் தரும். பண வரவு அதிகரிக்கும். வருமானம் கூடும். லாபம் அதிகரிக்கும். லாட்டரி, பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யலாம்.
கன்னி ராசி
புதனின் வக்ர இயக்கத்தால் உருவான மகா விபரீத ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வருமானம் கூடும். பொருட்கள், பங்குச் சந்தை, தங்கம்-வெள்ளி மற்றும் சொத்து வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் குறிப்பாக நன்மை பயக்கும். லாபம் அதிகரிக்கும்.
துலா ராசி
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நேரம் துலாம் ராசிக்காரர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. புதனின் வக்ர சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய திட்டம் தீட்டுவதில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தைப் பெறலாம். இது தவிர நண்பர்களிடம் இருந்து சிறப்பான பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ