ஆவணி பெளர்ணமி ரக்‌ஷாபந்தன் ராசிபலன்கள்! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Raksha Bhandhan Day Rasipalan : குரோதி ஆண்டில் ஆவணி மூன்றாம் நாள் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதியன்று திருவோண நட்சத்திர நாளன்று பெளர்ணமி விரதம்... ரக்‌ஷாபந்தன் ராசிபலன்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2024, 09:56 PM IST
  • பூணூலை மாற்றும் ஆவணி அவிட்ட நாள்
  • ஆவணி மாத பெளர்ணமி யாருக்கு எப்படி இருக்கும்?
  • ரக்‌ஷாபந்தன் நாள் ராசிபலன்...
ஆவணி பெளர்ணமி ரக்‌ஷாபந்தன் ராசிபலன்கள்! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்! title=

குரோதி ஆண்டு ஆவணி மாத பௌர்ணமி நாள் திருவோணம் நட்சத்திர தினத்தன்று, யாருக்கு என்ன ராசிபலன் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். இன்று சனி நட்சத்திரப் பெயர்ச்சி அடைந்தார். நாளை பெளர்ணமியில் பூணூல் மாற்றும் வைபவம், ஜெபம், காயத்ரி மந்திரம் என இந்துக்களின் வீடுகளில் மங்கலமான நாளாக இருக்கும். அதோடு, வட இந்தியாவில் சகோதர-சகோதரிகளுக்கு இடையிலான பிணைப்புக்கான பண்டிகையான ரக்‌ஷாபந்தன் கொண்டாட்டமும் நாளை தான் வருகிறது. இந்த நாள் யாருக்கெல்லாம் நல்ல நாள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 

19-08-2024 ராசி பலன்கள்

மேஷம் : காப்பீடு தொடர்பான விவகாரங்களில் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும் நாள், முதலீடுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். பொறுப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படும் நாள்.  

ரிஷபம் : விவசாயம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ரிஷப ராசியினருக்கு வாழ்க்கைத் துணை மூலம் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பயணங்கள் கைகூடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாவதுடன் குடும்பத்தினருடன் பயணங்கள் சென்று வரும் வாய்ப்புகளும் தென்படுகின்றன.

மிதுனம் : காரணமே இல்லாமல் பழைய நினைவுகள் மனதில் கவலைகளை ஏற்படுத்தும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படவும். திடீர் பயணங்கள் அலைச்சலைக் கொடுக்கும். தயக்கமும், சுணக்கமும் நிறைந்த நாள் இது. 

மேலும் படிக்க | ராகு சனி & சூரியன் மூன்று கிரகங்களும் சேர்ந்து 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கும்மியடிக்கும்!

கடகம் : சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படலாம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு கவனம் அவசியம். உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையலாம்.

சிம்மம் : உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை தரும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாய் நடைபெறும்.

கன்னி : ஒப்பந்தம் சார்ந்த பணிகள் லாபத்தைக் கொடுக்கும். புதுமையான விஷயங்களை நோக்கி ஆர்வம் திரும்பும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாமர்த்தியமாக செயல்படுவது நல்லது. இசை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் : சமூகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும். திடீர் செலவுகள் கடன் வாங்கும் அளவுக்குக் கொண்டு செல்லும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.

விருச்சிகம் 
நினைத்த காரியங்கள் கைகூடும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதில் தெளிவு பிறக்கும், இது வாழ்க்கையில் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கச் செய்யும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும்.  

மேலும் படிக்க | ஆகஸ்டில் அபூர்வ பிரதோஷம்! 3 பிரதோஷம் வரும் மாதத்தில் சனி பிரதோஷ காலத்தில் சிவன் நந்தி வழிபாடு!

தனுசு
நண்பர்களை சந்திக்குக்ம் வாய்ப்பு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் இருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கலுடைய திறமைக்கான மதிப்பு கிடைக்கும். புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். 

மகரம் 
எதிர்பாராத விதத்தில், நெருங்கியவர்களிடம் இருந்து கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியைத் தரும். தொழில் மற்றும் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய அனுபவம் கிடைக்கும், வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும், செயல்களில் தெளிவு பிறக்கும்.  

கும்பம் 
வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகள் மனதைக் கிளறிவிடும், அது கவலைகலை ஏற்படுத்தி, கவலையை அதிகரிக்கும்.

மீனம் 
தோற்றத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும், சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரத்து, சேமிப்பை அதிகரிக்கும். குழந்தைகளிடம் கொன்சம் கண்டிப்புடன் இருப்பது நல்லது.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | ஆகஸ்ட் 26 முதல் செவ்வாய் கிரகத்தால் மோசமாக பாதிக்கப்படும் 3 ராசிகள்! மிதுன செவ்வாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News