Womens T20 World Cup Final: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
ஆஸி., பேட்டிங்
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத் மூனே 74 (53) ரன்களை அடித்தார். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் மரிசான் கப், ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இலக்கை எட்டாத தெ.ஆப்பிரிக்கா
157 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 61 ரன்களை எடுத்தார். இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, 6ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
மேலும் படிக்க | WPL 2023: அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த வந்தது மகளிர் ஐபிஎல்!
Australia complete the second hat-trick of ICC Women's #T20WorldCup titles
WHAT A TEAM!#AUSvSA | #TurnItUp pic.twitter.com/wZTePUmRSr
— ICC (@ICC) February 26, 2023
இரண்டாவது ஹாட்ரிக்
2010, 2012, 2014ஆம் ஆண்டுகளில் ஹாட்ரிக் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, 2018, 2020, 2023ஆம் ஆண்டுகளிலும் உலக்கோப்பையை வென்று இரண்டு ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளது. இதுவரை எட்டு மகளிர் டி20 உலக்கோப்பை தொடர்களே நடைபெற்றுள்ள நிலையில், முதல் முறையாக நடைபெற்ற 2009ஆம் ஆண்டில், இங்கிலாந்து அணியும், 2016இல் மேற்கு இந்திய தீவுகள் அணியும் உலகக்கோப்பையை வென்றன.
ஐசிசி தொடர்களில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இதுவரை தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே கிடையாது. முதல் முறையாக இந்த தொடரில், சொந்த மண்ணில் இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென்னாப்பிரிக்கா அணி, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்கா வீராங்கனைகள் மைதானத்தில் கண்ணீருடன் காணப்படுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ