ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இரண்டு இந்திய ஹாக்கி வீரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டு முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் ரவீந்தர் பால் சிங் மற்றும் எம்.கே.கௌசிக் ஆகியோர் கோவிட் -19 உடன் போராடி சனிக்கிழமை உயிரிழந்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 9, 2021, 09:32 AM IST
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இரண்டு இந்திய ஹாக்கி வீரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு! title=

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய முன்னாள் ஹாக்கி வீரரும் பயிற்சியாளருமான எம்.கே.கௌசிக் சனிக்கிழமை காலமானார். கௌசிக் அவர்கள் இந்திய தேசிய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார். 1988 ஆம் ஆண்டில் அவருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

தகவல்களின்படி, 66 வயதான கௌசிக் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா (Coronavirus) நோய்த்தொற்றுடன் போராடி வந்தார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அணியின் உறுப்பினரான கௌசிக், ஏப்ரல் 17 அன்று கோவிட் -19 பாசிட்டிவ் (Covid 19 Positive) இருப்பது கண்டறியப்பட்டது.

ALSO READ | 180 மாவட்டங்களில் 7 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை: ஹர்ஷ்வரதன்

இந்தியாவின் மூத்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு கௌசிக் பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆண்கள் அணி 1998 ஆம் ஆண்டு பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றது. அவரது பயிற்சியாளராக இருந்தபோது, ​​இந்திய மகளிர் அணி 2006 தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றது. அவருக்கு 1998 ல் அர்ஜுனா விருதும், 2002 ல் துரோணாச்சார்யா விருதும் வழங்கப்பட்டது.

ரவீந்தர் பால் சிங் லக்னோவில் காலமானார்
ரவீந்தர் பால் சிங் லக்னோவில் விவேகானந்தா மருத்துவமனையில் காலமானார். சிங் ஏப்ரல் 24 ஆம் தேதி விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை, அவரது நிலை திடீரென மோசமடைந்தது, அவரை வென்டிலேட்டரில் வைக்க வேண்டியிருந்தது என்று குடும்பத்தினர் கூறினர்.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடிய சிங், திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவர் 1979 ஜூனியர் உலகக் கோப்பையிலும் விளையாடினார் மற்றும் ஹாக்கியில் இருந்து  விலகிய பின்னர் ஸ்டேட் வங்கியில் இருந்து தன்னார்வ ஓய்வு பெற்றார். இரண்டு ஒலிம்பிக்கைத் தவிர, 1980 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி, 1982 உலகக் கோப்பை மற்றும் 1982 ஆசிய கோப்பை ஆகியவற்றிலும் விளையாடி உள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News