சென்னை: மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்தவஃப் சிவசங்கர். பாபா என்று அழைக்கப்பட்ட அவருடைய பக்தைகள் ஐந்து பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
சுசீல்ஹரி சர்வதேச பள்ளி நிறுவனர் சிவசங்கர்மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரின் பேரில் சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவின் ஆசைக்கு இணங்கச் சொல்லி மாணவிகளை மூளை சலவை செய்த சிவசங்கரின் பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, பள்ளியின் ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா, பாரதி ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
Also Read | CBCID Arrest: டெல்லியில் சிவசங்கர் பாபா கைது
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக காவல்துறையினர் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, வாக்குமூலத்தைப் பதிவு செய்துக் கொண்டார்.
சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இந்த ஐந்து பேருக்கும் நேரடி தொடர்பும் இல்லை என கூறி , ஐவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
முன் ஜாமீன் பெற்ற ஐந்து பேரும் 2 வாரங்களுக்கு காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து இட வேண்டும். அதோடு, தங்கள் பாஸ்போர்ட்டை (passports) விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Also Read | சிக்கலில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி: அங்கீகாரம் ரத்தாகுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR