கோழிக்கோடு: மங்களூருவுக்குச் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சென்னயைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) குழு வெள்ளிக்கிழமை அதிகாலை காவலில் எடுத்தது. 117 ஜெலடின் குச்சிகள் 350 டிடொனேடர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கிய பை ஒன்று அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைவதற்கு சற்று முன்னதாக பாலக்காடு பிரிவுடன் இணைக்கப்பட்ட RPF இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
சென்னை (Chennai) சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
ரயிலில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கோழிக்கோடு ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர் வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
ALSO READ: ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS
ஆரம்பத்தில் வெடி பொருட்கள் அடங்கிய பையைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அந்தப் பெண் சாதித்ததாகவும், பின்னர் தான் தலசேரிக்கு செல்வதாகவும், கிணறுகள் தோண்டும்போது பயன்படுத்த வேண்டிய வெடிபொருட்களை எடுத்துச் செல்வதாகவும் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அந்தப் பெண் டி 1 பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
பொதுவாக இப்படிப்பட்ட வெடி பொருட்கள் (Detonators) கிணறுகள் தோண்டும்போது பாறைகளை வெடிக்கச்செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், இந்த வழக்கை விரிவாக விசாரிக்க காவல்துறை மற்றும் ஆர்.பி.எஃப் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில் கேரள காவல்துறையின் உளவுத்துறையும் இணைந்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக அந்தப் பெண் ஷோர்னூருக்கு அழைத்துச் செல்லப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பெண் கூறுவதைப் போல இந்த வெடி பொருட்கள் உண்மையிலேயே பாறைகளை வெடிக்கச்செய்யதான் எடுத்துச் செல்லப்பட்டனவா அல்லது இதற்குப் பின்னால் சதித் திட்டம் ஏதாவது உள்ளதா என்பதை நோக்கி விசாரணை நடக்கும். பை தன்னுடையது அல்ல என அந்தப் பெண் முதலில் கூறியதும் அவர் மீதான சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளன.
கேரளா மற்றும் தமிழகத்தில் (Tamil Nadu) தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், காவல் துறையும் பாதுகாப்பு நிறுவனங்களும் அதிகபட்ச உஷார் நிலையில் இருக்கின்றன. தற்போது ரயிலில் வெடிபொருட்கள் பிடிபட்டிருப்பது இரு மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் இதே போன்ற ஜெலடின் குச்சிகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வண்டி ஒன்றை மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் போலீசார் கண்டறிந்தனர். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
ALSO READ: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR