ஜெயக்குமார் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வராது - அதிமுக மாஜிக்கு ஓபிஎஸ் சூடான பதில்

O Panneerselvam : அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைத்து தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது என சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2024, 01:15 PM IST
  • அதிமுக மக்கள் நம்பிக்கையை இழக்கிறது
  • பத்து தேர்தல் தோல்விகளுக்கும் யார் காரணம்
  • சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
ஜெயக்குமார் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வராது - அதிமுக மாஜிக்கு ஓபிஎஸ் சூடான பதில் title=

O Panneerselvam News Latest : சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுக மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது என்றார். பிரிந்து இருக்ககூடிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்களின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், " மாவீரன் புகழ் உலகம் இருக்கும் வரை, உலக மக்கள் இருக்கும் வரை இருக்கும். நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அதற்கு முதல் குரல் கொடுத்தவர் இவர்தான். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, 50 ஆண்டுகள் ரத்தத்தை சிந்தி வளர்த்த இந்த மாபெரும் இயக்கம், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதை உணர வேண்டும்.

மேலும் படிக்க | அண்ணாமலை எனும் வேதாளம்... ரத்தத்தை குடித்த அட்டை ஓபிஎஸ் - சீறும் ஜெயக்குமார்!

அதிமுக படுதோல்விக்கு யார் காரணம்?

இரட்டை இலை சின்னம் நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. தொண்டர்களின் எழுச்சிக்காக தான் அதிமுக என்கிற இயக்கத்தை புரட்சித்தலைவர் உருவாக்கினார். பத்து தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த நிலை தொடரக்கூடாது என்று தான் பிரிந்திருக்க கூடிய அதிமுக இணைய வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்கள் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக நம்பிக்கை இழந்துவிட்டது

முதல் தோல்வியின்போதே நான் கூறினேன் தோல்வி ஏற்பட்ட இடத்தில் சென்று நேரடியாக குறைகளை அறிந்து செயல்படுவோம் என்று, ஆனால் யாரும் கேட்கவில்லை. விக்கிரவாண்டியில் 83 சதவீதத்தின் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது என்றால், அதிமுக வாக்குகளும் பதிவாகியுள்ளது என்றுதான் அர்த்தம். அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியவரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பொதுமக்களின் கருத்தை நல்ல அபிப்பிராயத்தை அதிமுக இழந்திருக்கிறது.

ஜெயக்குமாருக்கு பதில்

ஜெயக்குமாருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் வாயில் இருந்து நல்ல வார்த்தைகள் வராது எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இயக்குனர் அமீர் சரமாரி கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News