Infinix Note 11s: நம்ப முடியாத தள்ளுபடி, முந்துங்கள்

Infinix Note 11S: குறைந்த விலையில் பல ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2022, 02:37 PM IST
  • இன்ஃபினிக்ஸ் போனில் நம்ப முடியாத தள்ளுபடி.
  • இன்ஃபினிக்ஸ் நோட் 11எஸ்-ல் அசத்தலான அம்சங்கள்.
  • விலையில் கிடைக்கும் அதிரடி சலுகை.
Infinix Note 11s: நம்ப முடியாத தள்ளுபடி, முந்துங்கள் title=

இன்பினிக்ஸ் டேஸ் விற்பனையின் நான்காவது நாளான இன்று, அதாவது மே 13 அன்று, குறைந்த விலையில் பல ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது. இந்த விற்பனை ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் உள்ளது. 

பிளிப்கார்டின் இந்த விற்பனையில் இன்ஃபினிக்சின் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பெற முடியும். இன்றைய விற்பனையில் சிறந்த டீலில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்ஃபோனைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம். 

8ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை மலிவான விலையில் வாங்கலாம்

8ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், கண்டிப்பாக இன்பினிக்ஸ் டேஸ் சேலை வாடிக்கையாளர்கள் பயன்படுட்திக்கொள்ளலாம். இதில், சிறந்த அம்சங்களுடன் மிகக் குறைந்த விலையில் இன்ஃபினிக்ஸ் நோட் 11எஸ் போனை வாங்கலாம். 

மேலும் படிக்க | வெறும் ரூ.1500க்கு விவோவின் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க அரிய வாய்ப்பு 

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ 16,999 ஆகும். எனினும், இந்த விற்பனையின் கீழ், வாடிக்கையாளர்கள் இதை ரூ 13,499 க்கு வாங்க முடியும். 

வாடிக்கையாளர்கள் சிட்டி பேங்க் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால், 10 சதவீத உடனடி தள்ளுபடியின் பலனையும் பெற முடியும். இது தவிர, ரூ.11,550 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த டீலில் கிடைக்குறது. 

இந்த அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டால், மிகக் குறைந்த விலையில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்களால் பெற முடியும். 

இன்ஃபினிக்ஸ் நோட் 11எஸ்-இன் அம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 120Hz ஆதரவுடன் 6.95 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 செயலியில் இயங்குகிறது. மேலும் 64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு சேமிப்பு ஆப்ஷன்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவாக்க முடியும். 

புகைப்படம் எடுப்பதற்கு, இந்த ஸ்மார்ட்போனில், 50எம்பி முதன்மை சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2எம்பி மைக்ரோ கேமரா ஆகியவையும் உள்ளன. போனின் முன்பக்க கேமரா 16எம்பி கொண்டது. பவர் பேக்கப்பிற்காக 5000எம்ஏஎச் பேட்டரியும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Sony Xperia ACE 3: மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சோனி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News