பத்மாவத் படத்திற்கு சிபிஎப்சி சான்றிதழ் வழங்கியதை ரத்து செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இயற்கையாகவே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்துவதில் வெற்றியாளர்கள் முனைப்போடு இருப்பார்கள்.
படத் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா செய்தியாளர் அளித்த பேட்டியில் தான் பாடகியாகவும் முத்திரை பதிப்பேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். இவர் இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் A M ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள் மூலம் ஒரு தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தவர்.
பெப்சி வேலைநிறுத்தம் விவகாரத்தில் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில்:-
"எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று "வேலைநிறுத்தம்" என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசிகூடிய சீக்கிரம் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்"
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் விஷால் செய்தியார்களிடம் கூறியதாவது:
டிடிஹெச்சில் திரைப்படத்தை வெளியிடுவது பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகள் மீது நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
பிரபல பட அதிபர் பஞ்சு அருணாசலம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
1941-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர்.
அன்னக்கிளி, ப்ரியா, உல்லாச பறவைகள், கழுகு உள்பட 15 படங்களை தயாரித்தார். அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். 8 படங்களை டைரக்டு செய்துள்ளார். இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.