சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனுவை விசாரிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், சுகாதாரத்துறை துணை இயக்குநர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா உத்தரவு.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்து இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துகளுடன் தீர்ப்பளித்துள்ளனர்.
மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை என உயர்நீமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
'லியோ'படத்தின் 'நா ரெடி தான் வரவா' பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபரிடம் கேட்கலாம்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய மனு நீதிபதி டபிள்யூ. டியெங்டோ பெஞ்ச் முன் சமர்ப்பிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறையின் மருத்துவர்கள் குழுவும் சிகிச்சையை ஆராயலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு, 1948 தொழிற்சாலைகள் சட்டம் அத்தியாயம் VI விதியின் கீழ் இரட்டை ஓவர் டைம் தகுதி உள்ளதா என்பது குறித்து நீதிபதிகள் வி ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் வருமான வரி வழக்கில் திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.