ஹெச்-1பி விசா தற்காலிக நிறுத்தம்?

ஹெச்1 பி பிரிமியம் விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது 6 மாதத்திற்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Last Updated : Mar 4, 2017, 12:59 PM IST
ஹெச்-1பி விசா தற்காலிக நிறுத்தம்? title=

வாஷிங்டன்: ஹெச்1 பி பிரிமியம் விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது 6 மாதத்திற்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹெச்-1பி விசா மூலமாக வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. இதில் இந்தியாவை சேர்ந்த ஐ.டி ஊழியர்களே அதிகம். 

இந்த அறிவிப்பால் இந்திய ஐ.டி., ஊழியர்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்கள், அமெரிக்க குடிமக்களின் பணியிடத்தை பறிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். எனவே, ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களை அமெரிக்க அரசு கொண்டுவந்தது. 

இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை சேவை துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. 

Trending News