ஞானவாபி வளாகத்தில் அனுமார் மற்றும் நந்தி இருந்ததை வெளிப்படுத்தும் வரலாற்று ஆவணங்கள்

காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் சிவனின் 11வது ருத்ராவதாரமான ஹனுமானும் இருந்தார் என்பது வெளியாகியுள்ளது

Last Updated : May 22, 2022, 03:12 PM IST
  • ஞானவாபியின் சிவன் சிலை கிடைத்ததாக தகவல்
  • தற்போது அனுமான் இருந்ததும் ஆவணங்கள் வெளிப்படுதுகின்றன
  • சிவனின் ருத்ராவதாரம் அனுமான்
ஞானவாபி வளாகத்தில் அனுமார் மற்றும் நந்தி இருந்ததை வெளிப்படுத்தும் வரலாற்று ஆவணங்கள் title=

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு அனுமாரும் இருந்த செய்தி வெளியாகி பரபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் சிவனின் 11வது ருத்ராவதாரமான ஹனுமானும் இருந்தார் என்பது வெளியாகியுள்ளது.

முன்னதாக வாரணாசியின் ஞானவாபி விவகாரம் நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கை தொடர்பான இந்த விவகாரம் பரபரப்பான நிலையில், ஜீ நியூஸ் நடத்திய விசாரணையில் உண்மையான ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது.

இந்த ஆவணமானது, இந்து தரப்பின் கூற்றுக்கு வலுச்சேர்ப்பது போல் தெரிகிறது.

மேலும் படிக்க | #AyodhyaKeBaadKashi: மோட்சத்திற்கு வழிகாட்டும் நகரில் 'சிவன்’ 

ஜீ நியூஸ் மேற்கொண்ட விசாரணையில், ஞானவாபி வளாகத்தின் 154 ஆண்டுகள் பழமையான படம் கிடைத்துள்ளது. இந்த வரலாற்றுப் படம் ஒரு பெரிய ஆவணமாக இருப்பதுன், பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது.

ஹனுமான் ஞானவாபியில் இருந்தார்
இந்தப் படம் 1868ஆம் ஆண்டு பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் சாமுவேல் பார்ன் என்பவரால் எடுக்கப்பட்டது. ஞானவாபி மசூதி வளாகம் தொடர்பாக இஸ்லாமியர்களின் தரப்பு சொல்வதைத் தவிர, இந்தப் படம் வேறு ஒரு கதையைச் சொல்கிறது.

இந்தப் படத்தில், ஞானவாபி வளாகத்தில் உள்ள சிவனின் முன் இருக்கும் நந்தி மற்றும் ஹனுமான் சிலை இருப்பது, வளாகத்தில் உள்ள தூண்களின் கலைப்படைப்புகளில் தெரிகிறது,

அதாவது சிவபெருமானின் 11வது ருத்ராவதாரமான ஹனுமான், ஞானவாபியில் அமர்ந்திருக்கிறார் என்பது, இந்து தரப்பின் ஞானவாபி வளாகத்தில் உள்ள இந்து சின்னங்கள் மற்றும்  தெய்வங்களின் சிலைகள் தொடர்பான கூற்றுக்களை மேலும் உறுதிப்படுத்துகிறது.

india

இந்த வரலாற்று ஆதாரம் எங்கிருந்து வந்தது?
முன்னதாக, சர்ச்சைக்குரிய இடத்தில், மா சிருங்கர் கௌரி என்று அறியப்படும் அன்னை பார்வதி இருந்ததற்கான ஆதாரத்தை அளித்து, இந்து தரப்பு, இங்கு ஆண்டு முழுவதும் அன்னையை வழிபட வேண்டும் என்று கோரியது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

மேலும் படிக்க | ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இதற்கிடையில், ஹிந்து தரப்பின் கூற்றுகளை வலுப்படுத்தும் இந்த உண்மையான ஆதாரம்  அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள 'தி மியூசியம் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்' இல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை ஜீ நியூஸ் எடுத்த இந்தப் படம் தெளிவுபடுத்துகிறது.  

பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் சாமுவேல் பார்ன் 1863 முதல் 1870 வரை 7 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றினார். இந்த குறிப்பிட்ட படம் 1868 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

இங்கு ஞானவாபி வளாகத்தில் சிவலிங்கத்திதைத் தவிர, நந்தி, ஹனுமான் சிலை மற்றும் இந்து தொல்பொருட்கள் இருப்பதாக இந்து தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், இந்த அரிய  பழமையான படம் (154 ஆண்டுகள் பழமையான புகைப்படம்), இந்து தரப்பின் கூற்றுகளை உறுதி செய்கிறது.

மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News