தெலுங்கு தேசத்திற்கு 4, ஜேடியுவுக்கு 2! பாஜக ஒதுக்கியுள்ள அமைச்சரவை விவரங்கள்!

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர்களும்,ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 9, 2024, 11:15 AM IST
  • சந்திரபாபுவிற்கு 4 மத்திய அமைச்சர்கள்.
  • ஜனதா தளத்திற்கு 2 மத்திய அமைச்சர்கள் பதவி.
  • மோடியின் 3.0 அமைச்சரவை விவரங்கள்.
தெலுங்கு தேசத்திற்கு 4, ஜேடியுவுக்கு 2! பாஜக ஒதுக்கியுள்ள அமைச்சரவை விவரங்கள்! title=

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார். நேருவிற்கு பிறகு 3வது முறையாக பதவியேற்கும் நபர் என்ற பெருமையை அடையவுள்ளார் நரேந்திர மோடி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அரசு தனிப்பெரும்பாண்மை அடையவில்லை என்பதால் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார். இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர் பதவியும், நிதிஸ் குமாரின் ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவியும் கிடைக்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | PM Modi: பிரதமர் பதவியேற்பு விழாவில் நடைபெறவுள்ள சுவாரஸ்ய அம்சங்கள்!

 

மோடியின் அமைச்சரவை

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடு, ஹரிஷ் பாலயோகி, டக்குமல்ல பிரசாத் மற்றும் மேலும் ஒருவர் சேர்த்து மொத்தம் 4 பேர் பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரண்டு மூத்த தலைவர்களான லாலன் சிங் மற்றும் ராம்நாத் தாக்கூர் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாலன் சிங் என்பவர் பீகார் மாநிலத்தில் உள்ள முங்கர் என்ற மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார். ராம் நாத் தாக்கூர் என்பவர் பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூரின் மகன் ஆவார்.

கடந்த ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஆந்திராவில் உள்ள 16 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்குதேசம் கட்சி 4 மத்திய அமைச்சர் பதவிகளையும், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியையும் கேட்டுள்ளது. அதே போல ஜனதாதளம் 12 இடங்களில் வெற்றி பெற்று 2 அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளது. 

பெரும்பான்மையை இழந்த பாஜக

2014 முதல் 2024 வரை இரண்டு முறை ஆட்சி செய்துள்ள பாஜக பெரும்பான்மையை தக்கவைத்து. ஆனால் இந்த முறை பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.  543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் தேவையென்ற நிலையில் பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே கூட்டணியுடன் இணைந்து தற்போது பாஜக பலம் 293 ஆக உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டு இருந்த நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறாது என்று தெரிந்தவுடன் உடனடியாக நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபுவை தொடர்பு கொண்டு கூட்டணியை உறுதி செய்தது.

இந்த இருவருக்கும் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணியும் அழைப்புவிடுத்தது. நிதிஸ் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை நிராகரித்துவிட்டதாக நிதிஷ் குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 7.15 மணிக்கு பதவியேற்று விழா நடைபெற உள்ள நிலையில் பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் மொரீஷியஸ் உட்பட அண்டைய நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க | இன்று பதவியேற்று கொள்ளும் 30 அமைச்சர்கள்! யார் யாருக்கு எந்த துறை?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News