இன்று கோவா சென்ற பிரதமர் மோடி , அங்கு நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். பிறகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி பேசினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது:- ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவே மக்கள் பாரதிய ஜனதாவிற்கு வாக்களித்ததாக குறிப்பிட்டார். அரசு மக்களிடம் எதையும் மறைக்கவில்லை என்ற மோடி, பினாமி பெயரில் சொத்து வைத்திருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது நல்ல முடிவு தான் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் கருப்பு பணம் என்ற நோயை ஒழிக்கவே நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பேசுகையில் அவர் முந்தைய அரசுகள் தாம் எடுத்த முடிவுகளை திரும்ப பெற்று கொண்டன. ஆனால் தாம் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பதாக கூறினார். பதவி ஆசைக்காக பிரதமராகவில்லை என்ற மோடி, நாட்டுக்காக உழைப்பதற்காகவே குடும்பத்தை விட்டு விட்டதாக குறிப்பிட்டார். என்னை உயிரோடு எரித்தாலும் செய்ய வேண்டியதை செய்யாமல் போகமாட்டேன் என்றார்.
மேலும் அவர், தமது ஆட்சியில் 20 கோடி பேருக்கு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க வரும் டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு கடிமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கருப்பு பணத்தை மீட்க மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக குறிப்பிட்டார்.